தடா கைதிகள் வழக்கு: விசாரணை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைப்பு
டெல்லி:
தடா கைதிகள் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 11-ம் தேதி நடைபெறும்என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த ஜூலை 30-ம் தேதிகடத்திச் சென்றார். 50 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை.
கடத்தியவர்களை விடுவிக்க கர்நாடக சிறைகளில் உள்ள 51 தடா கைதிகள் உள்பட 121 பேரையும்,தமிழகச் சிறைகளில் உள்ள 5 தமிழ்த் தீவிரவாதிகளையும் விடுவிக்கவேண்டும் வேண்டும் என்பது உள்படபல கோரிக்கைளை வீரப்பன் விதித்துள்ளான்.
வீரப்பனின் மேற்கண்ட கோரிக்கை உள்பட அனைத்தையும் ஏற்றுக் கொள்ள தமிழக மற்றும்கர்நாடக அரசுகள் சம்மதித்து அது தொடர்பாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.
ஆனால், கர்நாடக சிறைகளில் உள்ள 51 தடா கைதிகளின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்வழக்குகள் தாக்கல் செய்தனர். வீரப்பன் பிடிக்கும் பணியில் உயிரிழந்த போலீஸ்காரர் சகீல்அகமதுவின் தந்தை அப்துல் கரீம் உள்பட மேலும் சிலர் இவ் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் தங்களது பதில் மனுக்களைத் தாக்கல்செய்துவிட்டன. இதையடுத்து திங்கள்கிழமை இவ் வழக்கு விசாரணைக்கு வந்தது.
நீதிபதி எஸ்.பி. பரூச்சா தலைமையில் நீதிபதிகள் புகான், சிவராஜ் பாட்டீல் ஆகிய 3 பேர் கொண்டகொண்ட இவ் வழக்கை விசாரித்தது. தடா கைதிகள் விடுதலை தொடர்பான இவ் வழக்கு விசாரணைஅக்டோபர் 11-ம் தேதி தொடங்கும்.
அப்துல் கரீம் உள்பட வழக்குத் தொடுத்த மேலும் சிலர் தங்களது வழக்குக்கு ஆதாரமானஆவணங்களை இன்னும் தாக்கல் செய்யவில்லை. அவர்கள் அக்டோபர் 9-ம் தேதிக்குள்நீதிமன்றத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, பி.எல். வதேரா என்பவர் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தனது பதிலை புதன்கிழமைதாக்கல் செய்வதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications