தேவே கெளடாவின் கறுப்புத்துண்டு சபதம்
ஊட்டி:
தேயிலைப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் வரை கறுப்புத் துண்டு அணிவேன் என முன்னாள் பிரதமரும், ஜனதாள (எஸ்) தலைவர்களில் ஒருவருமான தேவேகெளடா ஊட்டியில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஊட்டியில் தேயிலை விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் தேவகவுடா உள்பட 1000 பேர் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர். ஆனால் இவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேல் போலீஸார் ஆலோசனை நடத்தி விட்டு இறுதியில்கவுடாவையும், பிறரையும் கைது செய்யவில்லை.
சாலை மறியலின்போது முன்னாள் பிரதமர் தேவே கெளடா பேசியதாவது:
தேயிலைப் பிரச்னையில் இன்று கறுப்பு நாளாக கருதப்படுகிறது. இதனை நினைவுபடுத்தும் வகையில் அ.தி.மு.க.,வினர் எனக்கு கறுப்பு சால்வைஅணிவித்துள்ளனர். தேயிலைப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் வரை இந்த சால்வையை நான் தொடர்ந்து அணிவேன்.
மத்திய அரசு தேயிலை விவசாயிகளின் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இதனை அணிந்திருப்பேன்.
தேயிலை விவசாயிகள் மீது தமிழக அரசு தாக்குதல்களை நடத்தியுள்ளது. காவல்துறை அதிகாரிகள் முதல்வருக்குப் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
கருணாநிதியின் ஆட்சி காலம் இன்னும் ஆறு மாதங்களே உள்ளன. நான் முதல்வராக இருந்தபோது விவசாயிகள் மீது எவ்வித தாக்குதல்களையும்நடத்தியதில்லை.
பிரதமர் வாஜ்பாய் விவசாயியாக இல்லை. அவருக்கு விவசாயிகளின் மீது அக்கறை இல்லை. சுயநலமிக்க, அதிகாரப் போக்குள்ள ஒரு ஆதிக்கத்தின் பிடியின்வாஜ்பாய் அரசு செயல்பட்டு வருகிறது.
வாஜ்பாய் அரசை இந்த சக்தி கட்டுப்படுத்தி வருகிறது. விவசாயிகளின் பிரச்னைக்காக நான் தொடர்ந்து போராட்டம் நடத்தவுள்ளேன் என்றார் கெளடா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications