ராஜ்குமார்: கர்நாடகம் முழுவதும் கேபிள் டிவி ஸ்டிரைக்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் கடத்தலைக் கண்டித்து கர்நாடகம் முழுவதும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பந்த் நடத்திவருகின்றனர்.
புதன்கிழமை காலை துவங்கிய இந்தப் போராட்டம் வியாழக்கிழமை காலை வரை நீடிக்கும். இந்த 24 மணி நேரபந்த் கர்நாடகம் முழுவதும் முழு வெற்றி அடைந்துள்ளது.
அரசுத் தொலைக்காட்சியின் அறுவை நிகழ்ச்சிகளில் இருந்து மக்களைக் காப்பாற்றி வரும் செயற்கைக் கோள்டிவிக்கள் ஏதும் இல்லாமல் மக்கள் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.எண்டர்டெய்ன்மென்ட் கேபிடலான பெங்களூரில் பாதிப்பு அதிகமாக உள்ளது. தியேட்டர்களில் கூட்டம்அலைமோதியது. பிரிகேட் ரோட், கமர்ஷியல் ஸ்ட்ரீட்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஸ்டார் டிவியிலிருந்து சன் டிவி வரை எந்தச் சேனலும் இல்லை. கர்நாடகத்தில், குறிப்பாக பெங்களூரில் மிகவும்விரும்பிப் பார்க்கப்படுபவை சன், விஜய், ராஜ் டிவி போன்ற தமிழ் சேனல்கள் தான். இதற்கு அடுத்த இடத்தைஇந்தி சானல்களும், அடுத்து ஆங்கில சேனல்களும் பிடித்துள்ளன.
கன்னட சேனல்கள் பெங்களூரில் அவ்வளவாகப் பார்க்கப்படுவதில்லை. ஆனால், கர்நாடகத்தின் பிற பகுதிகளில்இந்த சேனல்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. சன் டிவி குரூப்பிலிருந்து உதயா என்ற கன்னட சேனலும், உஷேஎன்ற கன்னட சேனலும் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர கேரளத்தின் ஏசியா நெட் குரூப்பிலிருந்து காவிரிஎன்ற சேனலும், சுப்ரபாதா என்ற மற்றொரு கன்னட சேனலும் இயங்கி வருகின்றன.
கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ஒரு நாளைக்கு இரு படங்களாவது காட்டுவது வழக்கம். இது தான் வீட்டில்இருக்கும் பெண்களுக்கும் பெரியவர்களுக்கும் ஒரே பொழுதுபோக்காக இருந்து வருகிறது.
புதன்கிழமை இவர்கள் படாத பாடு பட்டுவிட்டார்கள். மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்களும்,பள்ளி-கல்லூரிகளில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய மாணவர்களும் கேபிள் டிவி இல்லாமல் போரடித்துப்போய்அமர்ந்திருந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications