இந்தியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை: ரஷிய துணை பிரதமர் டெல்லி வருகை
டெல்லி:
இந்தியாவுக்கு ஆயுதங்கள் விற்பது தொடர்பாக ஆலோசனை நடத்த ரஷிய துணைப்பிரதமர் இல்யா கிளிபானோவ் தலைமையில் உயர்மட்டக் குழு புதன்கிழமை இரவுடெல்லி வருகிறது.
ரஷ்ய துணைப்பிரதமரும், அவருடன் வரும் அதிகாரிகளும் இந்தியாவில் மூன்றுநாட்கள் தங்கி இருப்பார்கள். இந்த மூன்று நாட்களில் அவர்கள் அமைச்சர்களுடனும்,பாதுகாப்பு அதிகாரிகளுடனும் நீண்ட நாட்களாக முடிவு செய்யப்படாமல் இருக்கும்விஷயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.
இந்த பிரதிநிதிக் குழுவில் ரஷ்ய அணு சக்தி அமைச்சர் யெவ்ஜெனி அடோமோவும்பங்கு பெற்றுள்ளார். இவர் இந்தியாவில் அணு சக்தி நிலையங்கள் அமைப்பது பற்றிபேச்சு வார்த்தை நடத்துவார்.
இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்த ரஷ்யா விரும்புகிறது. இதுவரைகையெழுத்தாகாமல் இருந்து வரும் ஒப்பந்தங்கள் புடினின் இந்திய விஜயத்தின்போதுகையெழுத்தாக வேண்டுமென்பதில் ரஷ்யா அதிக அக்கறை காட்டி வருகிறது.
இந்திய-ரஷ்ய கூட்டு பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த ஒப்பந்தங்களும் ரஷ்ய அதிபரின்விஜயத்தின் போது கையெழுத்தாகும். இந்த ஒப்பந்தம் நீண்ட நாட்களாககையெழுத்தாகாமல் இருந்துவருகின்றன.
இந்த ஒப்பந்தம் முன்னபே கையெழுத்தாகியிருக்க வேண்டும். ஆனால் ரஷ்ய அதிபர்போரிஸ் யெல்சின் உடல்நலக் குறைவு காரணமாக இந்தியாவிற்கு வர இயலவில்லை.அதனால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இருந்தது.
ரஷ்ய துணை பிரதமரின் விஜயத்தின் போது 300, டி-90 ரக டாங்குகளை இந்தியாரஷ்யாவிடமிருந்து வாங்குவது குறித்து பேச்சவார்த்தை நடைபெறும். இதன் விலைஅதிகமாக இருப்பதால் குறைக்க வேண்டுமென இந்தியா கோரி வருகிறது.
விமானம் தாங்கி கப்பலை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்த மாத இறுதிக்குள்கையெழுத்தாகும் என ரஷ்ய துணைப் பிரதமர் மாஸ்கோவிலிருந்து இந்தியாவுக்குக்கிளம்பும் முன் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த மாதம்2-ம் தேதி இந்தியா வரவிருக்கிறார்.அப்போது முடிவு செய்யப்பட உள்ள ராணுவ ஒப்பந்தங்கள் குறித்து இவர்கள்பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications