வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

டாக்டர் ராமதாஸ் தாக்கப்பட்டதையடுத்து பாண்டிச்சேரியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 3 கிராமங்களைச் சேர்ந்தகுடும்பங்களுக்கு தலா ரூ. 3,000 உதவித் தொகையும், 10 கிலோ அரிசியும் வழங்கப்படும் என்று பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் புதன்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் சண்முகம் பாண்டிச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:

ராமதாஸ் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ. 3 ஆயிரம் ரொக்கம், 10 கிலோ அரிசி வழங்கப்படும்.

பாண்டிச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி 15-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் அனுப்பியுள்ளனர்.

அவர்களிடம், அகில இந்திய மருத்துவக்கழகத்திடம் தடையில்லா சான்றிதழ் வாங்கி வரும்படி கூறியுள்ளோம். அவர்கள் அனுமதி பெற்றபின் தனியார்மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டால் அதில் 50 சதவீத இடத்தை பாண்டிச்சேரி மாணவர்களுக்காக ஒதுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படும் என்றார்சண்முகம்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+