தம்பி ஸ்டாலினை ஆதரிக்கும் கருணாநிதி: அண்ணன் அழகிரி கோபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆளும் திமுகவில் தலைமைக்கும், வாரிசுக்கும் இடையில் நடக்கும் போர் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. திமுக முப்பெரும்விழாவைப் புறக்கணித்த அழகிரி ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் 3 பேருக்கு, கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தலைமையின் அதிரடி ஆக்ஷன் கண்டு அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் கொதிப்படைந்துள்ளனர். குடும்பச் சண்டையை,கட்சிக்குள் நடக்கும் கோஷ்டிச் சண்டையாக சித்தரிக்க கட்சித் தலைமை முயல்வதாக அழகிரி ஆதரவாளர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டுகின்றனர்.

திமுகவில் எப்போதும் இல்லாத அளவுக்கு தலைமைக்கும் (கருணாநிதிக்கும்) வாரிசுக்கும் (அழகிரிக்கும்) இடையிலான சண்டைவலுத்துள்ளது. இவ்வளவு நாளும் மூடி மறைத்து வைக்கப்பட்ட இந்த விவகாரம் இப்போது வெடித்துக் கிளம்பியுள்ளது.

ஸ்டாலினா? அழகிரியா? யாருக்கு தலைமையின் (கருணாநிதியின்) ஆதரவு என்பது தான் பிரச்சனையே.

திமுக இளைஞரணி நிர்வாகிகள் தேர்தலில் அழகிரி ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டது, கட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களை கூட, அழகிரி ஆதரவாளர்கள் என்பதால் வேண்டுமென்றே வெளியேற்றியது, தம்பி ஸ்டாலினின் இந்தஅத்துமீறல்களை கண்டும் காணாததுபோல் தந்தையான தலைமை அமைதி காத்தது, அழகிரி ஆதரவாளர்களை அமைச்சர்கள்அலட்சியப்படுத்தியது, அதற்கு மூல காரணமாக தம்பியும், தந்தையும் இருப்பது என்று "குடும்ப கட்சியில் தனக்கு எதிராக நடந்தநிகழ்ச்சிகள் காரணமாக அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சமீபத்தில் திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.

திமுகவில் உள் கட்சிப் பிரச்னை தீவிரமடையும் போதெல்லாம் அரசியல் துறவறம் மேற்கொள்ளப் போவதாக கருணாநிதிஅறிவிப்பது வழக்கம். அதன் பின்னர் ஒட்டுமொத்த கட்சியும் கருணாநிதியை வேண்டி அறிக்கைகள் வெளியிடும்.

பின்னர் அந்த அறிவிப்பை அவர் வாபஸ் பெறுவார். இது கடந்த கால உதாரணம். அதேபோல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில்அழகிரியும் அந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், அவரது எதிர்பார்ப்பு தந்தை - தம்பி கூட்டணியால் முறியடிக்கப்பட்டது.

இதனால் தலைமைக்கு தனது எதிர்ப்பை மீண்டும் வெளிப்படுத்த முப்பெரும் விழாவை அழகிரியும், அவரது ஆதரவு மாவட்டச்செயலாளர்களும் புறக்கணித்தனர். இந்த செயல் கருணாநிதியின் கோபத்தை மேலும் கிளறி விட்டுள்ளதாம்.

திமுகவின் முக்கிய நிகழ்ச்சியாக கருணாநிதியால் கருதப்படும் முப்பெரும் விழாவை அழகிரியின் பேச்சை கேட்டு புறக்கணித்த 3மாவட்டச் செயலாளர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் கலைஞர்.

மதுரை நகர் மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி, வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்திஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏன் முப்பெரும் விழாவை புறக்கணித்தீர்கள்? இதற்காகஉங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்பதற்கு 15 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்றுகட்டளையிடப்பட்டுள்ளது.

தலைமையின் கோபத்திற்கு ஆளான அழகிரியையே "கட்சித் துரோகி போல் சித்தரித்து கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுவிட்டது. "அழகிரியுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகபொதுச்செயலாளர் அன்பழகன் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அழகிரிக்கே இந்த நிலைமை என்கிறபோது, நம்மை கருணாநிதி விட்டு வைக்க மாட்டார் என்ற எண்ணத்தில், நோட்டீஸ்க்கு எந்தவிளக்கம் அளிக்க மறுத்து விட்டனர் அழகிரி ஆதரவு மாவட்டச் செயலாளர்கள். ஆனால், முதல்வரை நேரில் சந்தித்து விளக்கம்அளிக்கலாம் என்று இவர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

அவர்களை சந்திப்பதற்கு கூட முதல்வர் மறுத்து விட்டாராம். "அழகிரியுடன் சேர்ந்து அவர்கள் கட்சி நடத்தட்டும்; என்னைசந்திக்கத் தேவையில்லை என்று கடுப்புடன் சொல்லி அனுப்பி விட்டாராம்.

கொஞ்சம் வளைந்து கொடுக்க தந்தை தயாரில்லை என்ற நிலையில் அழகிரி என்ன செய்யப் போகிறார்? தந்தையிடம் மன்னிப்புகேட்டு, தம்பி ஸ்டானிலிடம் அணுசரணையாக நடந்து கொள்வாரா அல்லது கட்சித் தலைமைக்கு எதிராக தனது அதிருப்திக்கொடியை இன்னும் உயரத்தில் தூக்கிப் பிடிப்பாரா? என்ற கேள்வி திமுகவுக்கு பெரிய சவாலாக எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+