நைரோபி கிரிக்கெட்: இந்திய அணி தேர்வு
சென்னை:
கென்ய தலைநகர் நைரோபியில் அக்டோபர் 3 முதல் 15-ம் தேதி வரை நடைபெறஉள்ள ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டிக்கான 14 பேர் கொண்ட இந்திய அணிஅறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயரை தேர்வு கமிட்டித் தலைவர்தலைவர் சந்து போர்டே, சென்னையில் வியாழக்கிழமை அறிவித்தார்.
முன்னதாக அவரது தலைமையில் மதன்லால், அனில் தேஷ்பாண்டே, டி.ஏ. சேகர்,அசோக் மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட குழு 2 மணி நேரம் தீவிரமாக ஆலோசனைநடத்தி இந்திய அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்தது.
இந்திய அணியில் பரோடாவைச் சேர்ந்த ஜாஹீர் கான், டெல்லி விக்கெட் கீப்பர் விஜய்தாஹியா, பஞ்சாப்பின் யுராஜ் சிங் ஆகியோர் புது முகங்களாக இடம் பெற்றுள்ளனர்.மும்பையின் வினோத் காம்ப்ளிக்கு மீண்டும் இந்திய அணியில் இடம்அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியை அறிவித்து நிருபர்களிடம் சந்து போர்டே கூறியதாவது:
ஐ.சி.சி. நாக்-அவுட் போட்டிக்கு இப்போது அறிவிக்கப்பட்டுள்ள அணி எல்லாவகையிலும் சிறந்ததாக இருக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நல்லஅணியைத் தேர்வு செய்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்திய அணியில் 3 புது முகங்கள் இடம் பெற்றுள்ளனர். மும்பையின் இடது கைஆட்டக்காரர் வினோத் காம்ப்ளிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.புதிய அணி மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.
அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடிஇந்தியாவுக்கு வெற்றி தேடித் தருவார்கள் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்தரூபன் பாலின் பெயரும் பரிசீலிக்கப்பட்டது.
ஆனால், அவரை விட டெல்லியின் விஜய் தாஹியா சிறந்த ஆட்டக்காரர் என்றுகருதுவதால் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளோம். தமிழகத்தின் சடகோபன் ரமேஷ் தேர்வுசெய்யப்படவில்லை.
கேப்டன் கங்குலியும் சச்சின் டெண்டுல்கரும் தொடக்க ஆட்டக்காரர்களாகக்களமிறங்குவார்கள். தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரர் எஸ். ஸ்ரீராம்சேர்க்கப்பட்டுள்ளார். இளம் வீரரான அவர் சிறப்பாக விளையாடுவார் என்றுகருதுகிறோம்.
வீரர்கள் அனைவரும் திறமையின் அடிப்படையில்தான் இந்திய அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அணியின் நிர்வாக மேலாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்.அணியின் பயிற்சியாளராக அன்ஷுமன் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்போர்டே .
அணி விவரம்:
சவுரவ் கங்குலி (கேப்டன்), ராகுல் திராவிட் (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர்,வினோத் காம்ப்ளி, ஹேமங் பதானி, யுராஜ் சிங், அனில் கும்ப்ளே, சுனில் ஜோஷி,எஸ். ஸ்ரீராம், ராபின் சிங், வெங்கடேஷ் பிரசாத், அஜித் அகார்கர், ஜாஹிர் கான், விஜய்தாஹியா (விக்கெட் கீப்பர்).
யு.என்.ஐ.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications