ஜெ.க்கு இளங்கோவன் திடீர் புகழாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா தலைமையில் நடக்கும் பெரியார் பிறந்தநாள் விழாவுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

பெரியாரின் 122 வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 23 ம் தேதி சென்னை தியாகராயநகர் பனகல் பூங்காவில் நடைபெற இருக்கிறது.

வரலாற்றை உருவாக்கிய வைக்கம் வீரர், சுயமரியாதை உணர்வைத் தூண்டிய தன்மானச் சிங்கம், மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த மனிதனுக்குப்பகுத்தறிவைப் புகட்டியவர் பெரியார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வேரூன்றுவதற்குக் காரணமாகத் திகழ்ந்த பெரியாருக்கு பச்சைத் தமிழர் காமராஜரின் பொற்கால ஆட்சியின் வெற்றியில்கணிசமான பங்கு உண்டு.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு சட்ட திருத்தத்தை சட்டசபையில் நிறைவேற்றியதோடு, இந்திய அரசியல்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து 9 வது அட்டவணையில் இடம்பெற பாடுபட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இதன் மூலம் பெரியாரின்கொள்கைக்கு பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா என்பது தெளிவாகப் புரியும்.

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கலந்து கொள்ளும் இவ்விழாவில், சோனியா காந்தியின் பிரதிநிதியாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத் மற்றும் சர்வகட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

இவ்விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் தோழர்கள் மூவர்ணக் கொடியேந்தி, கொள்கை முழக்கமிட்டு, பெரியார் புகழ் பாடி அலைகடலென அணி திரண்டு வரவேண்டுமென்று அன்புடன் அழைக்கிறேன் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் இளங்கோவன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+