மேற்கு வங்க வெள்ளத்துக்கு 125 பேர் பலி
கல்கத்தா:
மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் 125 பேர் இறந்துள்ளனர் என அரசு அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
இதுவரை 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 5 லட்சம் பேர்பாங்குரா, பிரபுன், புர்த்வான் , ஹெளரா, மிட்னாபூல், முர்ஷிதாபாத், நாடியா மற்றும்வடக்கு தின்னாஜ்பூர் ஆகிய ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள மீட்பு மையங்களில்தஞ்சம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் முர்ஷிதாபாத்தில் அதிகபட்சமாக 69 பேர் இறந்துபோனார்கள். பிர்பும் மாவட்டத்தில் 28 பேர் இறந்து போயுள்ளனர்.ஆயிரக்கணக்கானகால்நடைகள் இறந்து போயுள்ளன.
புர்த்வான் மாவட்டத்தில் வெள்ளத்தில் வீடிழந்தவர்கள் ரயில்வே பிளாட்பாரங்களில்தங்கியுள்ளனர்.
ரயில்வே சந்திப்புகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில்களில் வீடிழந்த மக்கள்தங்கியிருக்கிறார்கள் அவர்கள் அந்த ரயில்களிலேயே சமைத்து, தூங்கி, குளிப்பதுஉட்பட்ட அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். சிலர் கால்நடைகளையும்தங்களுடனேயே தங்க வைத்துள்ளனர் என புர்த்வானில் உள்ள ரயில்வே அதிகாரிகள்தெரிவித்தனர்.
வியாழக்கிழமை ஏற்பட்டுள்ள புதிய வெள்ளப் பெருக்கால் நிலைமை மிகவும்மோசமடைந்துள்ளது. மசஞ்ஜோர் மற்றும் தில்பாரா அணைகள் நிரம்பி உள்ளதால்அந்த அணைகள் உடையும் அபாயம் உள்ளது. அதனால் அந்த அணைகளிலிருந்துதண்ணீர் திற்நது விடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்யாததால் வெள்ளம் சற்றே வடியத்துவங்கியுள்ளது..உணவு அமைச்சர் சத்ய ரஞ்சன் மகாதா வெள்ளம் பாதிக்கப்பட்டபகுதிகளுக்கு உணவுர் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
துணை முதல்வர் புத்த தேவ் பட்டாச்சார்யா முர்ஷிதாபாத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட 20 லாரி உணவுப் பொருட்களை காணவில்லை என கூறியுள்ளார்.
24 வடக்கு பர்கானா மாவட்டத்தில் சூறாவளியால் 100 வீடுகள் சேதமடைந்துள்ளன.அங்கும் மீட்புப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ராணுவத்தின் உதவி இல்லாமல் மீட்புப் பணியில் ஈடுபடுவது கஷ்டம் என மாநில அரசுதெரிவித்துள்ளது. மாநில அரசு மீட்புப் பணியில் உதவுமாறு ராணுவத்தை அரசுகேட்டுக் கொண்டுள்ளது.
ராணுவ ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுப் பொட்டலங்களைபோட்டு வருகின்றன.
மாநில முதல்வர் ஜோதிபாசு அதிகமான அளவில் பொருளதவி செய்யுமாறு மக்களைக்கேட்டுக் கொண்டுள்ளார்.ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி மீட்புப் பொருட்களைஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்படாது எனகூறியுள்ளார்,
இதைத் தவிர தொலைத் தொடர்பு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் அதிக தூரம்உள்ள இடங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதும் கடினமாக உள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்












Click it and Unblock the Notifications