ஹாக்கி: ஸ்பெயினைத் தோற்கடித்தது இந்தியா
சிட்னி:
ஹாக்கிப் போட்டியில் ஆண்களுக்கான பி பிரிவில் முக்கியமான ஆட்டத்தில் இந்தியாவெற்றி பெற்றது.
சனிக்கிழமை காலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல்கணக்கில் அட்லாண்டா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்பெயின்அணியைத் தோற்கடித்து.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு மேலும்பிரகாசமடைந்தது. இப்போது பி பிரிவில் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில்உள்ளது.
ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் பல்ஜித் சிங் தில்லான் முதல் கோல் அடித்துஇந்தியாவுக்கு முன்னிலை ஏற்படுத்தித் தந்தார். கிடைத்த பெனால்டி ஸ்டிரோக்வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அவர் கோல் போட்டார்.
இதையடுத்து ஸ்பெயின் வீரர்கள் தங்கள் ஆட்டத்தை கடுமையாக்கினர். முதல் பாதிஆட்டம் முடிய 14 நிமிடங்கள் இருந்தபோது ஒரு கோல் போட்டு சமன் செய்தனர்.
இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் இருந்ததால்இந்திய அணியினர் தங்களது ஆட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர்.
இதனால், முதல் பாதி ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருந்தபோது இந்தியாவுக்கு ஒருபெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை திலிப் டர்க்கி சரியாகப் பயன்படுத்திகோல் போட்டதால் இந்தியா மீண்டும் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் 7-வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி கார்னர்வாய்ப்பை பல்ஜித் சிங் தில்லான் கோலாக மாற்றியதால் இந்தியா 3-1 என்றுமுன்னிலை பெற்றது.
இதையடுத்து ஸ்பெயின் வீரர்கள் தங்களது ஆட்ட முறையை மாற்றினர். கோல் போடஅவர்கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை இந்திய கோல்கீப்பர் ஜூடேமெனசெஸ் தடுத்துவிட்டார்.
இருப்பினும் கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் வித்தியாசத்தை 3-2 என்றஸ்பெயின் வீரர்கள் குறைத்தனர். ஆனால், அதன் பிறகு அவர்களுக்கு கோல் போடவாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்திய கோல்கீப்பரின் சிறப்பான ஆட்டத்தில் இந்தியா மேலும் கோல் வாங்காமல் தப்பியது.
இதையடுத்து 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. மிகவும்முக்கியமான இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து அரையிறுதிவாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.
இப் பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடந்தஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா 8 புள்ளுகளுடன் முதலிடத்தில்உள்ளது. இந்தியா 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென் கொரியா 5புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும் உள்ளன.
இந்தியா அடுத்து போலந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அந்தஆட்டத்திலும் வெற்றி பெற்றால்தான் அரையிறுதியில் இந்தியா நுழைய முடியும்.
ஆஸ்திரேலியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய கிடைத்தவிட்டது மாதிரிதான்.ஆனால், இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. தென் கொரியாஅடுத்து தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டால் இந்தியாவுக்கு வாய்ப்புகிடைப்பது சிரமமாகிவிடும்.
ஏனெனில் தென் கொரியா அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அதற்கு மொத்தம் 8புள்ளிகள் கிடைக்கும். இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டால்பிரச்சினையில்லை. அரையிறுதியில் நுழைந்துவிடும்.
மாறாக போலந்துடன் டிரா காணும் பட்டத்தில் ஒரு புள்ளிதான் இந்தியாவுக்குக்கிடைக்கும். அப்போது தென் கொரியாவும், இந்தியாவும் தலா 8 புள்ளிகளுடன்இருக்கும். ஏற்கெனவே தகுதிச் சுற்றில் இந்தியாவை தென் கொரியா வென்றுள்ளதால்அதற்கு அரையிறுதி வாய்ப்பு கிடைத்துவிடும்.
ஆகவே, போலந்துடனான அடுத்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அரையிறுதியில் நுழைந்துவிடும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications