கண்ணனை நீக்க யாரும் கோரவில்லை .. புதுவை முதல்வர்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்துசமீபத்தில் விலகியவருமான கண்ணனை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு யாரும்தன்னிடம் கேட்கவில்லை என அம்மாநில முதல்வர் ப.சண்முகம் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் மூப்பனார் உள்பட யாரும் இதுதொடர்பாக என்னை அணுகவில்லை.
தற்போது பாண்டிச்சேரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் நடந்து வரும் பிரச்சிசனைகள்அந்தக் கட்சியின் உள் விவகராம். இதை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்.
ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ. ராஜாராமன் இன்னும் என்னைச் சந்தித்து எனது ஆட்சிக்குஅவரது ஆதரவைத் தரவில்லை. மதச்சார்பற்ற கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டணி எப்படிமதவாத சக்திகளின் ஆதரவைப் பெற முடியும்?
ஒரு ஆட்சியின் நடைமுறைகளைப் பார்த்துத் திருப்தி கொண்டு ஒரு கட்சி, ஆட்சிக்குஆதரவு கொடுக்க முன்வந்தால் அதை மறுக்க முடியாது.
சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும்என்று திமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஜானகிராமன்கோரியுள்ளது வியப்பூட்டுகிறது. ஏதாவது ஒரு கட்சி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவைவாபஸ் பெற்றால்தான் இதுமாதிரியான சூழ்நிலை ஏற்படும்.
தற்போதைய சூழ்நிலையில் த.மா.கா. உள்பட கூட்டணிக் கட்சிகள் அனைவரும் எங்களதுஆட்சிக்கு ஆதரவு தருகின்றனர். எனவே நம்பிக்கை வாக்கு கோருவது என்ற அவசியமேஎழவில்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications