Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநாவுக்கரசு எம்.எல்.ஏ தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க தலைவர் திருநாவுக்கரசு புதுக்கோட்டை தொகுதி எம்.பி தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்என்று காங்கிரஸ் வேட்பாளர் சிங்காரவடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சிங்காரவடிவேலு சென்னைஉயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.

மனுவில், புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியில் 5-9-99 அன்று தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க தலைவர்திருநாவுக்கரசு, நான் மற்றும் ஐந்து பேர் போட்டியிட்டோம்.

அந்தத் தொகுதியில் மொத்தம் 7,80,852 ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. அதில் 10,848 ஓட்டுக்கள் செல்லாதவை. இதில் திருநாவுக்கரசு3,96,216 ஓட்டுக்களும், நான் 3,31,914 ஓட்டுக்களும் பெற்று இருந்தோம். திருநாவுக்கரசு 64,302 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்று அறிவிக்கப்பட்டது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே திருநாவுக்கரசும் அவருடைய ஆதரவாளர்களும் புதுக்கோட்டை தொகுதி முழுவதும் சட்டவிரோதமானகாரியங்களில் ஈடுபட்டனர். திருநாவுக்கரசு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தபோது அறந்தாங்கி தொகுதி தீயத்தூர் கிராமத்தில் தனக்கு ஓட்டுஇருப்பதாக கூறியிருந்தார்.

அதே நேரத்தில் அண்ணாநகர் தொகுதியிலும் அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. திருநாவுக்கரசு வீட்டு வசதிவாரியஅமைச்சராக இருந்தபொழுது, தமிழகத்தின் வேறு எந்த பகுதிகளிலும் தனக்கு வீடு இல்லை என்று கூறி அண்ணநகரில் வீடு ஒதுக்கீடு பெற்றார்.

எனவே,அவர் தீயத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று கூறியது தவறு. இது, 1950-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 17,18,19,20-ம்விதிகளுக்கு முரணானது. இது தவிர தொகுதிகளில் பல இடங்களில் கள்ள ஓட்டுக்களும், ஜாதி உணர்வுகளைத் தூண்டும் வகையில் போஸ்டர்களும்ஓட்டப்பட்டிருந்தன. இது போன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளின் காரணமாகத்தான் திருநாவுக்கரசு வெற்றி பெற முடிந்தது.

எனவே அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தனது மனுவில் சிங்கார வடிவேலு கூறியிருந்தார்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி டேவிட் கிறிஸ்டியான் வழக்கை விசாரித்து திருநாவுக்கரசுஇன்னும் ஆறு வாரத்திற்குள் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+