யார் உண்மையான கம்யூனிஸ்ட்? கருணாநிதி விளக்கம்
சென்னை:
நாங்கள் உண்மையான கம்யூனிஸவாதிகள். ஊழலுக்கு துணை போகும் போலி கம்யூனிஸ்ட்கள் அல்ல நாங்கள் என்று தமிழகமுதல்வர் கருணாநிதி கூறினார்.
இந்திய மனித உரிமைக் கட்சி சார்பில் சமூக நீதி மாநாடு சென்னையில் நடந்தது. இந் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதிபேசுகையில்,
இந்திய மனித உரிமை கட்சி சார்பில் இந்த விழா நடக்கிறது. இந்த பெயரில் ஒரு வினா எழுகிறது. மனிதன் யாரிடம் இருந்துஉரிமை கேட்கிறான்? மிருகமாக இருந்தால் மனிதனிடம் கேட்கலாம். ஆண்டவன் என்று ஒருவன் இருந்தால் அவனிடம் மனிதன்உரிமை கேட்கலாம். ஆனால், மனிதனே மனிதனிடம் உரிமை கேட்கும் அவல நிலை இங்கு தான் உள்ளது.
பெண் அடிமை, ஜாதிக் கொடுமை ஆகியவற்றுக்கு எதிராக அந்தக் காலத்தில் சீர்திருத்த அமைப்புகள் தோன்றின. வாங்காளத்தில்ராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை நிறுவினார். சுவாமி தயானந்த சரஸ்வதி வடஇந்தியாவில் ஆர்ய சமாஜகத்தைதோற்றுவித்தார்.
ஜோதி பாபுலே மராட்டியத்தில் சீர்திருத்த இயக்கத்தை உருவாக்கினார். கேரளாவில் நாராயணகுரு சீர்திருத்த கருத்துக்களைபரப்பினார். அந்த கால கட்டத்தில் தான் பெரியார் தமிழகத்தில் தோன்றினார்.
அவர் தனது சீர்திருத்த கொள்கைகளால் தாழ்த்தப்பட்ட மக்களை தூக்கிவிடப் பாடுபட்டார். மூட நம்பிக்கைகளை எதிர்த்துகேள்வி கேட்டவர்கள் பகுத்தறிவுவாதிகள். அவரைத் தொடர்ந்து வந்தது தான் திமுக.
அவரது நினைவாக 75க்கும் மேற்பட்ட பெரியார் சமத்துவபுரங்களை உருவாக்கி உள்ளோம். தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றசமுதாயத்தினருடன் சேர்ந்து வாழ்கிறார்கள். பல்வேறு இடங்களில் மற்ற சமுதாயத்தினருடன் தாழ்த்தப்பட்ட மக்கள் சேர்ந்துவாழும் நிலை இருந்து வருகிறது. சில இடங்களில் மட்டுமே தொழில் காரணமாக அத்தகைய மாற்றம் ஏற்படவில்லை.
சமத்துவபுரங்களை கட்டினால் ஜாதி ஒழிந்து விடுமா என்கிறார்கள். ஜாதி ஒழியக் கூடாது என்று நினைப்பவர்கள் தான் இந்தகேள்வியை கேட்கிறார்கள். இவர்களைப் பற்றி எனக்குத் தெரியாதா?
பெரியார் மட்டும் இல்லாவிட்டால் நான் கம்யூனிஸட் ஆகியிருப்பேன் என்று ஏற்கனவே நான் பேசியுள்ளேன்.
பெரியார் ஒருமுறை ரஷ்யா சென்று விட்டு வந்தார். அதற்குப் பிறகு திமுகவினரின் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குமாஸ்கோ, ஸ்டாலின், லெனின் என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்டது.
அந்த அளவுக்கு கம்யூனிச கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
இப்போது இருப்பவர்களைப் போல் கம்யூனிசத்தின் மீது போலி ஈடுபாடு கொண்டவர்கள் அல்ல நாங்கள். இப்போதுள்ளகம்யூனிஸ்ட்கள் ஊழல்வாதிகளுக்கு துணை போகிறவர்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications