மதுரையில் இன்னொரு வன்முறை: 3 பஸ்கள் உடைப்பு
மதுரை:
மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியைத் தாக்க முயற்சி நடந்தது.
இதையடுத்து அவரைத் தாக்க முயன்றவர்களுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே சண்டை மூண்டது.இந்த சண்டை வன்முறையாக மாறியது. இதில் 3 பஸ்கள் உடைக்கப்பட்டன.
மதுரைக்கு இது பொல்லாத காலம். ஒரு புறம் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியின் ஆதரவாளர்கள்பஸ்களை எரித்தும், உடைத்தும் வருகின்றனர். மறுபக்கம் அழகர் கோவில் மலையடிவாரத்தில் நரபலி ஆசிரமவிவகாரம் பூதகரமாகி பிரச்சனையை கிளப்பியுள்ளது.
இந் நிலையில் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து வரும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர்கிருஷ்ணசாமியைத் தாக்க ஒரு கும்பல் முயன்றுள்ளது. இதனால், மதுரையில் புதிதாக மற்றொரு பிரச்சனைஉருவெடுத்துள்ளது.
அவனியாபுரம் அருகே பனையூர் ரோட்டில் வந்து கொண்டிருந்த கிருஷ்ணசாமியின் கார் ஊர்வலத்தை ஒரு கும்பல்கையில் கம்பு, கத்திகளுடன் வழி மறித்து தாக்கத் தொடங்கியது. குறிப்பாக கிருஷ்ணசாமியின் காரை அக் கும்பல்சுற்றி வளைத்தது. இதையடுத்து மற்ற கார்களில் வந்த அவரது ஆதரவாளர்கள் தாக்கிய கும்பலுக்கு பதிலடி தரத்தொடங்கினர்.
இந்த சண்டையில் அந்தப் பகுதியில் வந்து கொண்டிருந்த 3 பஸ்களும் சிக்கிக் கொண்டன. இரு தரப்பினரும்பஸ்களின் மீதும் கல்வீசினர். இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. பயணிகள் உயிருக்கு அஞ்சி பஸ்களில்இருந்து இறங்கி சிதறி ஓடினர்.
அந்தப் பக்கமாக வந்த பிற வாகனங்கைளயும் இந்த வன்முறைக் கும்பல் விடவில்லை. அவற்றையும் தாக்கினர்.இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
போர்க் களம் காட்சியளித்த அந்தப் பகுதியில் கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன. போக்குவரத்துஸ்தம்பித்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் கலைந்துபோகச் செய்தனர்.
கிருஷ்ணசாமி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்துஅங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் அங்கேயே முகாமிட்டுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications