தடையை மீறி பேரணி .. எச்சரிக்கிறது புதிய நீதிக் கட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு அனுமதி கிடைக்கவில்லையென்றால் தடையை மீறி பேரணி நடத்தப்படும் என்று புதிய நீதிக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை புதிய நீதிக் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.சேதுராமன் தலைமையில் நடந்தது.
புதிய நீதிக்கட்சியின் சார்பில் முதல் மாநில மாநாடு மற்றும் பேரணியை வரும் அக்டோபர் 1 ம் தேதி சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
பேரணி நடத்துவதற்காக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. பேரணி நடத்த அரசு அனுமதிஅளிக்கவில்லையென்றால் தடையை மீறி கட்சி சார்பில் திட்டமிட்ட படி பேரணி நடக்கும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications