மைசூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
மைசூர்:
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதால் கர்நாடத்தின் பிரபல சுற்றுலா நகரமானமைசூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்திருக்கிறது.
கர்நாடகத்தின் பிரபலமான சுற்றுலா நகரம் மைசூர். தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிர மாநிலங்களில்இருந்து ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மைசூர் வந்து செல்கின்றனர்.
மைசூரில் உள்ள அரண்மனை, 100 ஆண்டு பழமையான மிருகக்காட்சி சாலை, கண் கவரும் பிருந்தாவன்பூங்கா போன்றவை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றது. இதைக் காண ஆண்டு தோறும்பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
பிரபல கன்னட நடிகர் கடத்தப்பட்ட பின் ஏற்பட்ட பதட்டதால் சுற்றுலாப்பயணிகளின் வருகைகுறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்கும் போது இந்த ஆண்டு 50 சதவிகிதம் சுற்றுலாப்பயணிகளே மைசூர் வந்துள்ளனர்.
மைசூர் அரண்மனையைக் காண செப்டம்பர் மாதத்தில் ஆண்டுதோறும் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம்சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.ஆனால் இந்த ஆண்டு 3 ஆயிரம் பேர் மட்டுமே வந்துள்ளனர்.
நுழைவுக்கட்டணம் மூலமான வருவாய் கடந்த ஆண்டு 80 ஆயிரம் ரூபாயாகும். இந்த ஆண்டு வருவாய்35 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆகும்.
தசரா விழாவைக் காண மைசூர் அரண்மனைக்கு ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். இந்த ஆண்டு அதுவும் குறையலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications