சென்னையில் சினிமா உதவி கேமிராமேன் படுகொலை
சென்னை:
சென்னை தி.நகரில் சினிமா உதவி கேமிராமேன் ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகரைச் சேர்ந்தவர் வேணுகோபால். திமுக பிரமுகர். இவரது மகன் சீனிவாசன். வயது 30. இவர் சினிமாவில் உதவிகேமிராமேனாகப் பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு தி.நகரில் உள்ள தெற்கு உஸ்மான் ரோடு தாமோதரன் தெருவில் நண்பர் ராஜா என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல் ஒன்று சீனிவாசனை அரிவாளால் சராமரியாக வெட்டிவிட்டு ஆட்டோவில் தப்பிச் சென்று விட்டது.படுகாயமடைந்த சீனிவாசன் அதே இடத்தில் இறந்தார்.
இந்தப் படுகொலை தொடர்பாக 4 பேரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வேறு பல தகவல்கள் கிடைத்தன.
அதாவது கடந்த ஆண்டு கடந்த ஆண்டு மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் இதே எட்டு பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டார்.அந்தக் கொலையை நேரில் பார்த்தவர் சீனிவாசன்தான். அவர் நீதிமன்றத்தில் சாட்சி சொன்னால் இந்த 8 பேருக்கும் தண்டனை கிடைக்கும்.
அதனால் அவரைத் தீர்த்துக் கட்ட பங்க் குமார் என்ற ரவுடியின் தம்பி முருகன் மற்றும் அவரது ஆட்கள் மூலம் சீனிவாசனைப் படுகொலைசெய்துள்ளனர் என்று தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications