நன்றி மறப்பது த.மா.காவுக்கும் உண்டு ... கருணாநிதி
சென்னை:
நன்றி மறக்கின்ற காங்கிரஸ் கலாச்சாரம் த.மா.கா.வுக்கும் உண்டு என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.
த.மா.கா. ஆவடி நகர மன்றத் தலைவர் சாந்திலால் ஜெயின் தலைமையில் அப்பகுதி த.மா.கா.வினர் 500 பேர் தி.மு.க.வில்இணைந்தனர். இந்நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்றது.
இதில் த.மா.காவினரை வரவேற்று முதல்வர் கருணாநிதி பேசுகையில், 1996----ம் ஆண்டில் தான் த.மா.கா தோன்றியது. ஏன்தோன்றியது, எப்படி தோன்றியது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும்.
அதுவரையில் அவர்களுடைய தலைவராக ஏற்றுக் கொண்டிருந்த நரசிம்மராவ், அந்த சட்டமன்றத் தேர்தலிலே என்ன முடிவெடுப்பதுஎன்பதை அறிவிக்காமல் இருந்தார். மூப்பனரும், அவருடைய நண்பர்களும் என்ன முடிவு என்பதை அறிந்து கொள்ள டெல்லிக்குசென்றனர்.
கடைசியாக நரசிம்மராவ் அ.தி.மு.க.வோடு கூட்டணி என்று அறிவித்தவுடன் மூப்பனாரும், அவருடைய நண்பர்களும் மிகுந்தவேதனையோடு சென்னைக்கு திரும்பி, அன்றைக்கே பெரும் புரட்சியை தொடங்கினார்கள்.
அது எத்தகைய புரட்சி என்பது உங்களுக்கு தெரியும். நரசிம்மராவை எந்தளவிற்கு விமர்சித்தார்கள். எந்த அளவிற்கு தாக்கிபேசினார்கள். ஒரு லஞ்ச அவதாரத்தோடு ஊழல் மகாராணியோடு எப்படிச் சேர்ந்து தேர்தலை நடத்துவது என்று கேள்வி எழுப்பிவெறும் வார்த்தையோடு நில்லாமல், நரசிம்மராவ் படத்தையெல்லாம் நெருப்பு வைத்து கொளுத்தினார்கள். அவருடையகட்அவுட்டுகளுக்கு செருப்பு மாலை அணிவித்தனர்.
இவ்வளவும் ஜெயலலிதாவை ஆதரித்தார் என்பதற்காகச் செய்யப்பட்ட காரியங்கள். இன்றைக்கு அதே ஜெயலலிதாவோடு கூட்டுசேர்ந்து கொண்டு தேர்தலில் நிற்கப் போகிறார்கள் என்றால், ஒரு முறை அவர்களையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நரசிம்மராவுக்கு என்ன செய்தோமோ அவை எல்லாம் நமக்கும் நடப்பதைப் போன்ற ஒரு கற்பனை அவர்களுக்கு வரவேண்டும்என்று கருதுகிறேன். அப்படி நடக்கக் கூடாது. ஆனால், அந்த நினைவு வரவேண்டும்.
பொதுவாகவே காங்கிரஸ் என்றாலே அதற்கொரு கலாச்சாரம் உண்டு. நன்றி மறக்கின்ற கலாச்சாரம். அது காங்கிரஸ் கட்சியின்பூர்வீகக் கலாச்சாரம். நீங்கள் தமாகாவிலிருந்து மட்டும் மீண்டு வரவில்லை. அந்த கலாசாரத்திலிருந்தும் நீங்கள் மீண்டுவந்திருக்கிறீர்கள் என்றார்முதல்வர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications