மகிழ்ச்சியைத் துக்கமாக்கிய பரமக்குடி நகராட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிறந்த குழந்தைக்கு வழங்க வேண்டிய பிறப்பு சான்றிதழுக்குப் பதிலாக இறப்புசான்றிதழை வழங்கி மகிழ்ச்சி அடைய வேண்டிய பெற்றோரை அதிர்ச்சியில்ஆழ்த்தியது பரமக்குடி நகராட்சி.

நகராட்சிகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறுவது என்பதே குதிரைக் கொம்புமாதிரி. அதிலும் இப்படி சம்பவத்தையே மாற்றி சான்றிதழ்கள் கொடுத்து குளறுபடிகள்செய்து குடும்பத்தை சோகத்தில் ஆழத்தி பரமக்குடி நகராட்சி புதிய சாதனைபடைத்துள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவை சேர்ந்தவர் மன்சூர். இவரதுமனைவி ஹம்தாபானு. இவரது சொந்த ஊர் பரமக்குடி. அங்குள்ள தனியார்மருத்துவமனையில் கடந்த 12ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து பிறப்புச் சான்றிதழ் கேட்டு பரமக்குடி நகராட்சியிடம் முறைப்படிவிண்ணப்பித்தார்.

அதன்படி 18ம் தேதி அன்று பிறப்புச் சான்றிதழ் என்ற பெயரில் நகராட்சி அலுவலர்ஒரு சான்றிதழ் வழங்கினார். அந்த சான்றிதழை வாங்கிக் கொண்டு பெற்றோர்வீட்டுக்கு சென்று விட்டனர்.

வீட்டில் அதை படித்துப் பார்த்தபோது திடுக்கிட்டனர். குழந்தை பிறந்ததற்கானசான்றிதழாக இல்லாமல், இறந்து விட்டதற்கான சான்றிதழாக அது இருந்ததை கண்டுகுழந்தையின் தாயார் அழ ஆரம்பித்து விட்டார்.

அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த சந்தோஷத்தில் இருந்த அந்த பெண்,இப்படியொரு துயரத் தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளதை கண்டு, நகராட்சிநிர்வாகம் மீது பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.

பொறுப்பற்ற முறையில் சான்றிதழ் வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+