அக்டோபர் 10ல் வாஜ்பாய்க்கு மூட்டு அறுவை சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

மும்பை:

பிரதமர் வாஜ்பாய்க்கு வரும் அக்டோபர் 10ம் தேதி மும்பையில் மூட்டு அறுவை சிகிச்சை நடக்கிறது.

தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் இந்த ஆபரேசன் நடக்கும்.

இதற்கான ஏற்பாடுகள் இந்த மருத்துவனையில் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. மத்திய தகவல்-தொழில்நுட்பத்துறைஅமைச்சர் பிரமோத் மகாஜனின் நேரடி கண்காணிப்பின் கீழ் மருத்துவனையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து மகாஜன் கூறுகையில், 10ம் தேதி அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது. இடையே ஏதாவது முக்கியமாற்றங்கள் ஏற்பட்டால் தவிர இந்த நாளில் நிச்சயம் அறுவை சிகிச்சை நடக்கும் என்றார்.

அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய டாக்டரான சித்தரஞ்சன் ரணவத் தான் இந்த அறுவை சிகிச்சையை செய்ய உள்ளார். அவர்இந்தியாவில் இருக்கும்போதெல்லாம் இந்த மருத்துவனையில் தான் பலருக்கும் மூட்டு அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார்.இதனால், பிரதமருக்கும் இங்கேயே சிகிச்சை அளிக்க விரும்புவதாக ரணவத் கூறினார். இதையடுத்துத் தான் கேண்டிமருத்துவனையை அரசு தேர்வு செய்துள்ளது.

8ம் தேதி பிரதமர் மும்பை வருவார். 10ம் தேதி அறுவை சிகிச்சை நடக்கும். 3 முதல் நான்கு நாட்கள் மருத்துவனையில்தங்கியிருக்கும் பிரதமர் பின்னர் ராஜ்பவனுக்கு செல்வார். அங்கு 4 நாட்கள் தங்கியிருப்பார். 18ம் தேதி வரை அவர் மும்பையில்இருப்பார்.

பிரதமர் இந்த மருத்துவனையில் இருக்கும்போது பிற நோயாளிகளுக்கு பிரச்சனை ஏற்பாடதவாறு பார்த்துக் கொள்ளப்படும்.அதே போல மருத்துவனையில் வெளியிலும் போக்குவரத்து பாதிக்கப்படா வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதமரின் உடல் நிலை குறித்து தினந்தோறும் பத்திரிக்கைகளுக்கு செய்திகளை அரசு வழங்கும் என்றார் மகாஜன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+