பிரபாகரனுடன் ரகசியமாக பேசவில்லை ... சந்திரிகா மறுக்கிறார்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு தான் கடிதம் எதையும் வழங்கவில்லை.அவருடன் ரகசியப் பேச்சும் நடத்தவில்லை என்று இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா மறுத்துள்ளார்.
நாட்டை பிளவுபடுத்தும் விதத்தில் சந்திரிகா செயல்படுகிறார். பிரபாகரனுடன் ரகசியப்பேச்சு நடத்தி வருகிறார் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் விக்கிரமசிங்கே புகார்கூறியிருந்தார்.
இதற்கு கொழும்பில் அவரது வீடு உள்ள டெம்பிள் ட்ரீ பகுதியில் கல்லூரிபேராசிரியர்கள் மத்தியில் சந்திரிகா பேசுகையில் சந்திரிகா பதிலளித்தார். அவர்பேசுகையில், 1994-ம் ஆண்டு அதிபர் பதவிக்கு வந்த பிறகு தமிழர் பிரச்சினையைத்தீர்ப்பதற்காக பல முயற்சிகளைத் துவக்கினேன்.
அதன் ஒரு பகுதியாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு பிரபாகரனுக்கும் அழைப்புஅனுப்பினேன். ஆனால் அவருடன் அரசோ அல்லது நானோ ரகசியப் பேச்சுவார்த்தைஎதையும் நடத்தவில்லை.
இதைத் தவிர விடுதலைப் புலிகளுக்கு பணமோ அல்லது பதுங்குமிடங்கள் கட்டசிமெண்ட்டோ அரசு வழங்கவில்லை.
விடுதலைப் புலிகளுக்கு அரசுத் தரப்பில் எழுதப்பட்ட கடிதங்கள் விக்கிரமசிங்கேவுக்குஎப்படிக் கிடைத்தது என்று தெரியவில்லை. இது மிகவும் வியப்பாக இருக்கிறது.
தமிழர் பிரச்சினை குறித்தும் வடக்கு இலங்கையில் நடந்து வரும் சண்டை குறித்தும்அரசு தெளிவான முடிவில் இருக்கிறது. அதிலிருந்து நானோ அல்லது எனது அரசோஎப்போதும் விலகிச் சென்றதில்லை.
வன்முறையை விட்டால் ஒழிய ஜனநாயகத்திற்குத் திரும்ப விடுதலைப் புலிகள்அமைப்பு அனுமதிக்க முடியாது. பிரபாகரனுக்கு எப்போதுமே அமைதியில்நம்பிக்கையில்லை. அதன் காரணமாகவே தமிழர்கள் மீது கூட அவர் வன்முறையைகட்டவிழ்த்து விடுகிறார் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications