வீரப்பனைப் பிடிப்பது கஷ்டம் ... கூறுகிறது தமிழக அரசு
சென்னை:
வீரப்பனை அரசியல் காரணங்களுக்காக கைது செய்யாமல் இல்லை என சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளது.
ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பி.எல்.வதேரா என்பர் தாக்கல்செய்த மனுவில் அரசியல் காரணங்களுக்காக வீரப்பன் கைது செய்யப்படவில்லைஎன்று கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசு பதில் அளித்து மனுத்தாக்கல் செய்துள்ளது.அதில் கூறப்பட்டிருப்பதாவது.
அரசியல் காரணங்களுக்காக வீரப்பன் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுவதுதவறு. முதலில் யானைகளை கொன்று தந்தங்களை திருடிய வீரப்பன் பிறகு சந்தனமரங்களை கடத்த தொடங்கினான்.
வீரப்பன் பற்றிய தகவல்கள் முதலில் பெரிய அளவில் பிரபலம் ஆனது 1987-ம்வருடம் தான் அப்பொழுது வனத்துறை அதிகாரி சிதம்பரத்தை அவனது ஆட்கள்கொன்றனர்.
வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் இது வரை 119 பேரை கொன்று குவித்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது. அவன் மீதும் அவனது ஆட்கள் மீதும் தமிழ்நாட்டில் 75கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வீரப்பன் தமிழக கர்நாடக எல்லையில் பதினாராயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுஉள்ள மலை காட்டுப்பகுதியில் நடமாடுகிறான். இதில் தமிழகத்தின் ஐந்துமாவட்டங்களில் மட்டும் எட்டாயிரம் சதுர கிலோ மீட்டர் வனப்பகுதி என்பதால்வீரப்பன் கும்பல் அங்கு பதுங்க நிறைய இடம் உள்ளது.
அதிரடிப்படை போலீஸூக்கு தகவல் தர அந்த பகுதியில் உள்ள கிராமவாசிகள்ன்வருவதில்லை. அவர்களை வீரப்பன் இரக்கமற்ற முறையில் மிரட்டி வைத்துள்ளான்.வீரப்பனின் மிரட்டலுக்கு பயந்து அந்தப்பகுதி மக்கள் அவனைப்பற்றிய தகவல்களைஅதிரடிப்படை போலீசுக்கு தெரிவிக்க அஞ்சுகிறார்கள்.
போலீஸூக்கு தகவல் தகவல் தருபவர்களுக்கு எதிராக வீரப்பன் இரக்கமின்றிபலாத்காரம் செய்வதை கண்டு மற்றவர்கள் போலீசுக்கு தகவல் தர அஞ்சுகிறார்கள்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications