க்ளைமாக்சை நெருங்குகிறது வீரப்பன் விவகாரம்?
சென்னை:
வீரப்பன் விவகாரம் க்ளைமாக்ஸின் உச்சத்தில் இருப்பதாகவே நினைக்கிறார்கள் தமிழக அதிகாரிகள். எப்படியும் ராஜ்குமார் திரும்பிவந்துவிடுவார்என்றும் உறுதியாகச் சொல்கிறார்கள்.
நாகப்பா எப்படி காட்டில் இருந்து வெளியே வந்தார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக தமிழகத்தைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. காட்டில் இருந்துதப்பி வந்து விட்டார் என்பதை எல்லாம் அதிகாரிகள் நம்பத் தயாராக இல்லை.
காட்டிற்குள் வேறு ஏதோ நடந்திருக்கிறது. மொத்தத்தில் நடப்பது எல்லாமே குழப்பமாகவே இருக்கிறது. அரசு தூதராக சென்றிருக்கும்,தற்பொழுது காட்டிற்குள்ளிருக்கும் நக்கீரன் ஆசிரியர் கோபாலுடன் வீரப்பன் நாகப்பாவை அனுப்பியிருக்கலாமே. அது ஏன் செய்யவில்லை. அவ்வளவுபெரிய காட்டிற்குள்ளிருந்து நாகப்பா அவ்வளவு எளிதாக தப்பிவர முடியுமா? அப்படி வந்தாலும் ராஜ்குமார் மற்றும் அவருடன் இருப்பவர்களின் நிலைஎன்ன என்று பல வகைகளில் யோசித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
அறுபது நாட்கள் ஆகிவிட்டது. ராஜ்குமார் எப்படி இருக்கிறார் என்பதை வெளியில் சொல்வதற்கு ராஜ்குமாருடன் உள்ளவரையே வெளியே அனுப்பிவிடலாம். அப்படிச் செய்தால், கர்நாடகாவில் உள்ள பதட்டத்தை சற்று குறைக்கலாம் என்பது கூட காட்டில் இருப்பவர்களின் எண்ணமாக இருக்கலாம்என்றும் நினைக்கிறார்கள் தமிழக அதிகாரிகள்.
அதே நேரத்தில் வீரப்பன் கேட்டிருக்கும், 121 பேர், தமிழ்தீவிரவாதிகள் 5 பேர் இவர்களை காட்டில் வீரப்பனிடம் ஒப்படைக்கும் வரை வீரப்பன்கோபமாகவே இருப்பான். 126 பேரை ஒப்படைத்துவிட்டால், ராஜ்குமார் பத்திரமாக விடுவிக்கப்படுவார் என்றும் சொல்கிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications