நாகப்பா விவகாரத்தில் அடுக்கடுக்காய் சந்தேகங்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

நடுக் காட்டுப் பகுதியில் இருந்து வீரப்பனையும் அவனது கூட்டாளிகளையும் ஏமாற்றிவிட்டு, காட்டுப் பகுதிகிராமங்களில் உள்ள வீரப்பனின் நெட் ஒர்க்கையும் மீறி, விலங்குகளிடமும் சிக்காமல், கடத்தப்பட்ட இடத்துக்கேதானே ஓடி வந்ததாக கூறும் நாகப்பாவை நம்ப பலர் தயாராக இல்லை.

உயர் காவல்துறை அதிகாரிகளிடம் இது குறித்துக் கேட்டால், நமுட்டுச் சிரிப்புடன் மேலும் தகவல் கூறமறுக்கினறனர்.

நாகப்பாவை சில நிபந்தனைகளோடு, சில முக்கியமான தகவல்களுடன் வீரப்பனே அனுப்பி வைத்திருக்கலாம்என்ற சந்தேகம் வலுப்பட்டு வருகிறது.

நக்கீரன் கோபால் மூலமாக அரசுத் தரப்பில் பேசி வரும் வீரப்பனும் தமிழ்த் தீவிரவாதிகளும் அவர் மூலமாகசொல்ல விரும்பாத செய்தியை நாகப்பா மூலமாக கர்நாடக அரசுக்கு சொல்லி அனுப்பியிருக்கலாம் எனத்தெரிகிறது.

இதனை மறைக்க அவர் தப்பி வந்ததாகக் கூற வேண்டும் எனவும் மிரட்டப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.வீரப்பனிடம் சிக்கியுள்ள ராஜ்குமார் உள்ளிட்ட மேலும் 3 பேரின் நலனைக் கருத்தில் கொண்டு இரு மாநிலஅரசுகளுடனும் சேர்ந்து கொண்டு நாகப்பா, தான் தப்பி வந்ததாகக் கூறுகிறார்.

நாகப்பா உண்மையிலேயே தப்பி வந்திருந்தாலும் அவர் எப்படி கடத்தப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்தார் என்பதுபுரியவில்லை. அப்படியெனில் வீரப்பன் தான் கடத்திய தொட்டகாஜனூர் பகுதிக்கு அருகில் தான்கூட்டாளிகளுடன் தங்கி இருக்கிறார் என்று பொருள. தீவிர போலீஸ் நடமாட்டமும், போலீசாரின் ரகசியஉளவாளிகளும் நிறைந்த இந்தப் பகுதியில் வீரப்பன் இருப்பாரா?

அதே போல நக்கீரன் கோபால் ஒவ்வொரு முறையும் காட்டுக்குள் செல்லும்போதும் 4 முதல் 5 நாட்கள் தன்னைநடத்தியே கூட்டிச் சென்றனர் என்று கூறியிருக்கிறார். அப்படியெனில் அவர்கள் நடுக்காட்டுப் பகுதியில்இருக்கிறார்கள் என்று தான் பொருள்.

இதில் ஏதோ மர்மம் இருப்பதை நிரூபிக்கும் மற்றொரு அம்சம், நாகப்பாவை சந்திக்க முயன்ற நிருபர்களைபோலீசார் சந்திக்க விடாமல் தடுத்தது தான். வியாழக்கிழமை இரவு தொட்டகாஜனூர் கிராமப் பகுதிக்கு வந்தநாகப்பா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாம்ராஜ்நகர் காவல் நிலையத்ற்கு கொண்டு செல்லப்பட்டார்.

முழு இரவும் அவர் அங்கேயே தங்க வைக்கப்பட்டிருந்தார். அவரைச் சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.உயர் மட்ட அதிகாரிகள் மட்டுமே அவருடன் பேச அனுமதிக்கப்பட்டன. நிருபர்கள் தொடர்ந்து அவருடன் பேசவலியுறுத்தியபோது, அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். நிருபர்களை அடித்து விரட்டும் அளவுக்குநாகப்பாவை தனிமைப்படுத்தியது ஏன் என்கின்றனர் நாகப்பா சொல்வதை நம்ப மறுப்பவர்கள்.

வெள்ளிக்கிழமை காலை நேரடியாக பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட அவர் தனது குடும்பத்தினரை சந்திக்கும்முன்பாக முதல்வர் கிருஷ்ணாவிடம் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் நேரடியாக ராஜ்குமார் குடும்பத்தினரைசந்தித்தார்.

அடுத்து நேராக மல்லையா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.அங்கிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

வீரப்பனின் நம்பர் டூவான சேத்துக்குளி கோவிந்தனை அடித்துப் போட்டுவிட்டு நாகப்பா தப்பி வந்ததாகக்கூறுவதை யாரும் நம்பத் தயாராக இல்லை. குறிப்பாக நாகப்பாவை நன்றாகத் தெரிந்த சினிமா வட்டாரத்தில் இதையாரும் நம்ப மறுக்கின்றனர்.

ஆனால் மிகுந்த அச்சத்துடனும், களைப்புடனும் காணப்பட்ட நாகப்பா ஒரு வழியாய் வீட்டுக்கு வந்ததில் அவரதுகுடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு சொல்வதைப் போல இவர் உண்மையிலேயே தப்பி வந்திருந்தால், வீரப்பன் மிகுந்த கோபம்அடைந்திருப்பான். இது பிரச்சனையை நிச்சயம் மேலும் சிக்கலாக்கும் என்பது தான் பிரச்சனை. புதிதாக வீரப்பன்என்ன நிபந்தனை விதிப்பானோ தெரியவில்லை.

காட்டுப் பகுதியில் வீரப்பனுடன் பேச்சுவார்த்தையில் உள்ள நக்கீரன் கோபால் திரும்பி வந்த பிறகு தான் இந்தப்பிரச்சனையில் கொஞ்சம் தெளிவு பிறக்கும்.

இந் நிலையில் நாகப்பா விவகாரம் குறித்து தனது அமைச்சர்களுடன் முதல்வர் கிருஷ்ணா வெள்ளிக்கிழமைஆலோசனை நடத்தினார்.

வீரப்பன் விவகாரத்தில் பிரச்சனை மேலும் சிக்கலாகியிருப்பது என்னவோ உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+