நாகப்பா தப்பினாரா? விடுவிக்கப்பட்டாரா?
பெங்களூர்:
வீரப்பன் கும்பலிடமிருந்து கன்னட திரைப்பட உதவி இயக்குநர் நாகப்பா தப்பி வந்ததுகுறித்து பல குழப்பங்கள் நிலவுகின்றன.
ராஜ்குமாருடன் சேர்த்துக் கடத்தப்பட்டவர்களில் ஒருவர்தான் நாகப்பா. சினிமா உதவிடைரக்டர். இவருக்கு நீரிழிவு நோய் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில நாகப்பா காட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.
ஆனால் நாகப்பா தப்பியிருக்க வாய்ப்பேயில்லை என்று கூறப்படுகிறது. அவருக்குநீரிழி நோய் முற்றியிருக்கலாம். மேலும் நாகப்பாவின் மனைவி நளினி கர்ப்பமாகஇருப்பதாகவும் செய்திகள் வந்தன. இதனால் வீரப்பனே அவரை விடுவித்திருக்கலாம்என்று கருதப்படுகிறது.
வீரப்பன் கும்பல் முன்பு போல இல்லை. அவருடன் தமிழ்த் தீவிரவாதிகள் சிலரும்இருக்கிறார்கள். கோபால் கடந்த முறை காட்டுக்குச் சென்று விட்டுத் திரும்பிய பின்செய்தியாளர்களிடம் கூறுகையில், முன்பு ஒரு வீரப்பனிடம் பேசினேன். இப்போதோ,10 வீரப்பன்களுடன் பேச வேண்டியுள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
ஒரு வீரப்பன் இருக்கும்போதே, யாரும் தப்புவது கடினம். இப்போது பல பேர்கொண்ட படையாக இருக்கும்போது நாகப்பா தப்பி வருவது எளிதானதாகஇருந்திருக்காது.
மேலும், சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் தப்பி வருவதுகாட்டுக்குப் புதிதான நாகப்பாவுக்குச் சாத்தியமில்லாதது. மேலும், சேத்துக்குளிகோவிந்தனை ஏமாற்றி விட்டு நாகப்பா தப்பியதாக கூறப்படுவது நம்ப முடியாததாகஇருக்கிறது. காரணம், வீரப்பனை விட புத்திசாலியாக கருதப்படுபவன் சேத்துக்குளிகோவிந்தன். அவனைத் தாண்டி நாகப்பா வந்திருக்க வாய்ப்பேயில்லை. எனவேவீரப்பனே நாகப்பாவை விடுவித்திருக்கலாம் என்று கருத வாய்ப்புள்ளது.
முன்னதாக கர்நாடகத்தில் பந்த் நடந்த வியாழக்கிழமை இரவு நாகப்பா தப்பி வந்ததகவல் வெளியானது. முதலில் வீரப்பன் நாகப்பாவை விடுதலை செய்துள்ளதாககூறப்பட்டது. ஆனால் பின்னர் நடந்த போலீஸ் விசாரணைக்குப் பிறகு நாகப்பா தப்பிவந்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் போலீஸ் தரப்பில் வெளியான தகவல்களும் கூடஉறுதியானதாக இல்லை.
காஜனூர் பங்களாவுக்கு நாகப்பா வந்து சேர்ந்தபோது நேரம் மாலை 5 மணி.களைப்புடனும், முகத்தில் லேசான காயத்துடனும் இருந்த நாகப்பா ராஜ்குமார்உறவினர்களிடம் தான் தப்பி வந்ததை விவரித்துள்ளார். அவர் கூறுகையில்,வியாழக்கிழமை அதிகாலை சிறுநீர் கழிப்பதற்காக எழுந்தேன். அப்போது எனக்குத்துணையாக சேத்துக்குளி கோவிந்தன் வந்தார். அப்போது இருட்டைப் பயன்படுத்திஓடி வந்தேன். வழியில் தீவிரவாதி மாறனையும் தாக்கிவிட்டுத் தப்பினேன் என்றுகூறியதாக உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுவரை தான் தப்பி வந்தது குறித்து நிருபர்களிடமோ அல்லது அரசுத்தரப்பினரிடமோ நாகப்பா எதையும் நேரடியாகக் கூறவில்லை. அவர் பெங்களூர் வந்தபின்தான் உண்மையில் என்ன நடந்தது என்பது உறுதியாகத் தெரிய வரும்.
நாகப்பா, நடிகர் ராஜ்குமாரிடம் பலவருடங்களாக இருந்து வருகிறார். இவரது மனைவிபெயர் நளினி. இவர்களுக்கு திவ்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications