இப்போது, கருணாநிதியுடன் மோதுகிறார் இளங்கோவன்
சென்னை:
இதுவரை அ.தி.மு.க மீது பாய்ந்து கொண்டிருந்த தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இப்பொழுது தி.மு.க மீது பாயஆரம்பித்திருக்கிறார்.
வெள்ளிக்கிழமை சென்னையில் நிருபர்களை சந்தித்த இளங்கோவன். புதன்கிழமை த.மா.கா நடத்திய மறியல் போராட்டத்தில் வாழ்த்திப் பேசிய காங்கிரஸ்துணைத்தலைவர் அன்பரசு, ஜனதாதளத் தலைவர் வடிவேலு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தி.க பொதுச்செயலாளர் வீரமணி உள்ளிட்ட தலைவர்களை கைது செய்ய போலீஸார் முயற்சி செய்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷ்னர் சிவனாண்டி தலைவர்களைகேவலமாக பேசியுள்ளார்.
தலைவர்களை மரியாதைக்குறைவாக நடத்தியுள்ளார். இவர் சேப்பாக்கத்தில் நடைபெற்ற மாநகராட்சி இடைத்தேர்தலிலும் தி.மு.கவினர் கள்ளவோட்டுபோட ஏற்பாடு செய்தார். இதனை கண்டித்த காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.கவினரை மிருகத்தனமாக தாக்கினார்.
சமீபத்தில் விவசாயிகள் நடத்திய அறப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் தாக்கியவர் இவர்தான். இவர் சென்னை மாவட்ட தி.மு.கவின்பொதுச்செயலாளர் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறையில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 10-க்கும் மேற்பட்ட பஸ்கள்எரிக்கப்பட்டு மக்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்று உள்ளது. இதனை உட்கட்சி விவகாரம் என்று கருணாநிதி கூறுகிறார்.
சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியை காரணம் இன்றி வம்புக்கு இழுக்கிறார் கருணாநிதி. காங்கிரஸ் கட்சியை நம்பிக்கை துரோம் செய்யும் கட்சி என்றுகூறி வருகிறார். கடந்த 71-ம் ஆண்டு சர்காரியா கமிஷனிலிருந்து யார் கருணையால் தப்பினார் என்பதை மறந்து விடக்கூடாது.
பெரியார் தனது கனவில் வந்து காங்கிரஸ் பற்றி கருத்து தெரிவித்ததாக கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க பற்றியும் கருணாநிதி பற்றியும் பெரியார் பக்கம்பக்கமாக எழுதினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உள்ளாட்சி இடை தேர்தல்களில் ஏற்கனவே காங்கிரஸ் உறுப்பினர்கள் இருந்த இடங்களில் மீண்டும் போட்டியிடுவோம். இதற்கு தோழமை கட்சிகள்ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறோம். கட்சியின் அமைப்பு தேர்தல்கள் நடந்து வருகிறது.
தேர்தலை தள்ளிப்போட வேண்டும் என்று நான் கருத்து சொல்லவில்லை. திருச்சி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். தென்மாவட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இடம் மற்றும் தேதி விரைவில்அறிவிக்கப்படும் இவ்வாறு நிருபர்களிடம் கூறினார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications