கருணாநிதியை மீண்டும் சந்தித்தனர் கன்னட நடிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மற்றும் கன்னட நடிகர், நடிகைகள் பட்டாளம் சென்னையில் முதல்வர் கருணாநிதியை மீண்டும் சந்தித்து, ராஜ்குமாரைஉடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.

கன்னட நடிகர், நடிகைகள் அந்த காலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் சேர்ந்து தமிழ் சினிமாவைக் கலக்கிய நடிகை சரோஜாதேவி(இவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்) தலைமையில் தமிழகம் வந்தனர். நடிகை சாரதா, நடிகர்கள் சந்திரசேகர், சசிகுமார், ரமேஷ்அர்விந்த் (தமிழ்ப் படங்களில் நடித்து வரும் கன்னட நடிகர்), குப்புசாமி, வெங்கடேஷ் ஆகியோர் சென்னை வந்தனர்.

இவர்களை இந்த குழுவை, தமிழ் சினிமா சார்பில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன்ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் இரு தரப்பினரும் வெள்ளிக்கிழமை மாலை கோட்டையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர். மாலை 5.45 மணிமுதல் 6.30 மணி வரை அவர்கள் கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வருடன் விவாதித்தனர்.

விரைவில் ராஜ்குமாரை மீட்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர். இன்னும் நான்கு தினங்களில் ராஜ்குமார் நல்லபடியாகமீட்கப்படுவார் என்று அவர்களிடம் முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+