அமாவாசை இரவைப் பயன்படுத்தி தப்பினேன் .. நாகப்பா
சாம்ராஜ் நகர்:
அமாவாசை இரவைப் பயன்படுத்தி வீரப்பன் கும்பலிடமிருந்து தப்பி வந்தேன் என்றுசினிமா டைரக்டர் நாகப்பா கூறியுள்ளார்.
வீரப்பன் கும்பலிடமிருந்து நாகப்பா வியாழக்கிழமை மாலை தப்பி வந்து ராஜ்குமாரின்பூர்வீக கிராமமான தொட்டகாஜனூருக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து அவர் சாம்ராஜ்நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டார்.
நாகப்பா சாம்ராஜ் நகர் காவல் நிலையத்தில் இருக்கும் விஷயம் அறிந்ததும்,வெள்ளிக்கிழமை காலை பத்திரிகை நிருபர்கள் காவல் நிலையம் விரைந்தனர்.நாகப்பாவைப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஆனால் அதற்குப்போலீஸார் மறுப்புத் தெரிவித்தனர். இதையடுத்து செய்தியாளர்கள் அனைவரும்காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
பிறகு சிறிது நேரத்திற்குப் பிறகு நாகப்பாவை செய்தியாளர்கள் சந்திக்க அனுமதிகொடுக்கப்பட்டது. செய்தியாளர்களிடம் பிறகு நாகப்பா பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவின் அழுகையுடன்கூடிய குரலை ரேடியோவில் கேட்டதில் இருந்தே என்னால் அங்கு இருக்கமுடியவில்லை. எப்படியாவது தப்ப முடிவு எடுத்தேன்.
புதன்கிழமை அமாவாசையாதலால் அன்று இரவு வீரப்பன் கும்பல் பூஜைகள்நடத்தியது. அப்போது இருந்த அடர்ந்த இரவைப் பயன்படுத்தி நான் தப்பி வந்துவிட்டேன்.
தமிழ்த் தீவிரவாதி மாறன் என்ற ஒருவர் இருப்பதே எனக்குத் தெரியாது.அவர்களிடமிருந்து நாங்கள் பிரித்தே வைக்கப்பட்டிருந்தோம்.
நான் தப்பி வந்து விட்டதால் நடிகர் ராஜ்குமார் விடுதலையில் பிரச்சினை ஏற்படாது.
கடந்த 60 நாட்களும் நாங்கள் காட்டுக்குள் நடந்து கொண்டே இருந்தோம்.அனைவரும் சேர்ந்து மொத்தம் 150 கிலோமீட்டருக்கு மேல் நடந்திருப்போம் என்றார்நாகப்பா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications