இந்தியாவுடன் அணு சக்தித் துறையில் ஒத்துழைப்ப அதிகரிக்க ரஷியா ஆர்வம்
மாஸ்கோ:
ரஷிய அதிபர் புடின் அடுத்த வாரம் மேற்கொள்ளவுள்ள இந்திய பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான அணு சக்தித் துறையில் ஒத்துழைப்பைவலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புடினுடன் இந்தியா வரும் ரஷியக் குழுவில் ரஷிய அணு சக்தித் துறை அமைச்சர் யெவ்ஜெனி அடமோவும் இடம் பெற்றிருப்பது இதை வலுப்படுத்தும்விதமாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.
மேலும், மும்பையிலுள்ள பாபா அணு ஆய்வு மையத்திற்கும் புடின் செல்லவுள்ளார். இதுவும் கூட இரு நாடுகளும் அணு சக்தித் துறையில் நெருங்கிய உறவைவளர்த்துக் கொள்வதற்கான அறிகுறியாகத் தெரிகிறது.
இதுகுறித்து இந்திய, ரஷிய அரசுகளிடையிலான கமிஷனின் துணைத் தலைவரும், ரஷிய துணைப் பிரதமருமான இலியா கிளபனோவ் கூறுகையில், இந்தியாவின்அதிகரித்து வரும் மின தேவையில் 50 சதவீதத்தைப் பூர்த்தி செய்ய ரஷியா உதவும். புதிதாக அணு உலைகளைக் கட்ட இந்தியாவுக்கு ரஷியா உதவும்.
தமிழகத்தின் கூடங்குளம் நகரில் 2000 மெகாவாட் திறன் கொண்ட அணு சக்தி நிலையம் ரஷிய உதவியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கானதொழில்நுட்ப திட்ட அறிக்கை தயாராக உள்ளது.
மாஸ்கோவில் இந்திய செய்தியாளர்களிடம் புடினுடைய தலைமை வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் செர்ஜி பிரிதோட்கோ பேசுகையில், அணு சக்தித் துறையில்,இந்தியாவுக்கு உதவ ரஷியா ஆர்வமாக உள்ளது. அணு ஆயுத சோதனைத் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா சேருவதன் மூலம் இந்திய, ரஷிய உறவும்வலுப்படும் என்றார்.
புடினின் இந்திய பயணத்தின்போது வாஜ்பாயுடன், சி.டி.பி.டி.ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது குறித்தும் பேசப்படும் என்று தெரிகிறது.
இரு நாடுகளும் சமீபத்தில் அணு ஆய்வு தொடர்பான ஒத்துழைப்பை அதிகப்படுத்திக் கொள்வது குறித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதேபோல,இந்தியாவுக்கு அணு ஆயுத எரிபொருளை வழங்குவது குறித்தும் ரஷியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய அமெரிக்க பயணத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு உலக அரங்கில் புதிய அடையாளம் கிடைத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் ரஷிய அதிபர் புடினின் இந்தியவருகை இந்தியாவுக்கு மேலும் புதிய பலத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications