7 நவாஸ் கட்சித் தலைவர்களுக்கு சிறைத் தண்டனை
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த 7 பேருக்கு ஒரு மாத சாதாரண சிறைத் தண்டனையும், ரூ 5000 அபராதமும் விதித்து பாகிஸ்தான்உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1997-ம் ஆண்டு செப்டம்பர் 28 ம் தேதி உயர்நீதிமன்றத்தில் நுழைந்து ரகளை செய்தது தொடர்பாக இவர்களுக்கு, நீதிபதி ரஷீத் ஹாசன் தண்டனை விதித்துத்தீர்ப்பளித்தார்.
விமானக்கடத்தல், கொலை முயற்சி போன்ற தேசதுரோக வழக்குகளில் சம்பந்தப்பட்டது தொடர்பாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கு விசாரணைக்கு வந்த போது முக்கிய சாட்சிகள் மற்றும் வீடியோ டேப்பில் பதிவு செய்யப்பட்டஆதாரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டது.
விசாரணை அப்போதைய முதன்மை நீதிபதி சாஜாத் அலி ஷா தலைமையில் நடந்தது. விசாரணை நடந்து கொண்டிருந்த போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியைச்சேர்ந்த 7 பேர் மற்றும் லாகூரிலிருந்து அழைத்து வரப்பட்ட பலர் நீதிமன்றத்துக்குள் நுழைந்து பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பொதுவாழ்க்கையில் ஈடுபடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கிலிருந்து இவர்களை டிவிஷன் பெஞ்ச் விடுதலை செய்ததது.
ஆனால் அதே நேரம் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் மீது மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்தார். இதைத்தொடர்ந்து, இவ்வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்புக் கூறப்பட்டது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications