வன்முறைக் கும்பலை ஆதரிக்கிறார் மூப்பனார் ..ராமதாஸ்
நெல்லை:
தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்க ளின் பிரச்சனைக்காக பாட்டாளி மக்கள் கட்சி பாடுபட்டு வருகிறது என்று கட்சி நிறுவனர் டாக்டர்ராமதாஸ் நெல்லையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மெட்ரிகுலேஷன் பள்ளிகள், எஸ்.டி.டி.பூத்துக்கள், டைப்ரைட்டிங் சென்டர்களில் படித்த பெண்களை வேலைக்கு அமர்த்தி குறைந்த சம்பளம் கொடுத்துவருகிறார்கள்.
இதை அரசு கட்டுப்படுத்தி அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்க உதவி செய்ய வேண்டும். தனியார் துறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
கடந்த 17 ம் தேதி புதுவை அபிஷேகப்பாக்கத்தில் என்னைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசுஉத்தரவிட வேண்டும். அமைதியாக இருக்கிற வடதமிழகத்தை கலவர பூமியாக மாற்ற இந்த வன்முறைக் கும்பல் முயன்று வருகிறது.இந்த வன்முறைக்கும்பலுக்கு ஆதரவு அளித்தவர் மூப்பனார். ஒரு நாள் இந்தக் கும்பல் அவரையும் தாக்கும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை போக்குவதற்காக பாமக கடந்த 20 ஆண்டுகளாகப் போராடி வருகிறது. தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்டமக்களை இணைப்பதற்காகவும் பாமக போராடி வருகிறது. பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. தவிர்க்க முடியாதவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் ராமதாஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications