உமா பாரதி, சுஷ்மா சுவராஜ் அமைச்சர் ஆகிறார்கள்?
டெல்லி:
பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவர்களான சுஷ்மா சுவராஜ் மற்றும் உமாபாரதி ஆகிய இருவருக்கும் மத்திய அமைச்சர் பதவிகொடுக்கப்படலாம் என்று பாரதீய ஜனதாக் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பிரதமர் வாஜ்பாய் மூட்டு வலி அறுவைச் சிகிச்சைக்காக அடுத்த மாதம்-9 ம் தேதி மும்பை புறப்படுகிறார். அதற்கு முன், இவர்கள் இருவரும்அமைச்சர்களாக்கப்படுவர் என்று தெரிகிறது.
பாரதிய ஜனதாக் கட்சியில் இரண்டு எம்.பி.பதவிக்கான காலியிடங்கள் உள்ளன. மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம்காலமானதால் ஒரு காலியிடமும், பங்காருலட்சுமண் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் இன்னொரு காலியிடமும்உள்ளது.
இரண்டு காலியிடங்களுக்கும் எம்.பி.யாக உமா பாரதியும், சுஷ்மா சுவராஜூம் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரையும்அமைச்சரவையில் சேர்ப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இருவரும் வாஜ்பாய் அமைச்சரவையில் முக்கியப் பதவி வகித்தவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சராக இருந்து வந்த உமா பாரதி, மத்தியப்பிரதேச அரசு 25, 000 தற்காலிக அரசு ஊழியர்களை அப்பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்துதனது பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும் அவரது ராஜினாமா கடிதத்ததை பிரதமர் வாஜ்பாய் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதேபோல, சுஷ்மா சுவராஜ் கடந்த 1999 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பெல்லாரி தோல்வியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைஎதிர்த்துப் போரிட்டுத் தோல்வியடைந்தார். அதற்குப்பின் அவர் ராஜினாமா செய்தார்.
முன்னதாக, இருவரும் பாரதிய ஜனதாக் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டனர் என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தது. ஆனால் அப்படி எதுவும்இல்லை என்று கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இருவரும் உள்துறை அமைச்சர் அத்வானிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications