நாகப்பாவை வீரப்பனே விடுவித்திருப்பார் .. ரேடியோ வெங்கடேசன்
சென்னை:
வீரப்பன் பிடியில் இருந்து நடிகர் ராஜ்குமாரின் உதவியாளர் நாகப்பா தப்பிஓடிவரவில்லை. நாகப்பா விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார் என்று தடா கைதிரேடியோ வெங்கடேசன் நிருபர்களிடம் சொன்னார்.
வீரப்பன் தன்னிடம் ஒப்படைக்கக் கோரிய தமிழ் தீவிரவாதிகளில் ஒருவரான ரேடியோவேங்கடேசன், குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தை சூறையாடிய வழக்கு, விழுப்புரம்வெடிகுண்டு வழக்கு ஆகியவற்றில் சம்ப்நதப்பட்டவர்.
காவல் நீடிப்புக்காக தடா கைதி ரேடியோ வெங்டேசன் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில்ஆஜர் செய்யப்பட்டார். இவரது போலீஸ் காவலை அடுத்த மாதம் 24-ம் தேதிவரைநீடித்து சென்னை தடா நீதிமன்ற நீதிபதி சின்ன பாண்டி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த வெங்கடேசன் நிருபர்களிடம், வீரப்பனின்கோரிக்கையை ஏற்று நான் உட்பட ஐந்து பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்தநடவடிக்கை மிகவும் சயானது தான்.
பெங்களூரில் வள்ளூவர் சிலை அமைப்பது, காவிரி நீர் பிரச்சனை மற்றும் மைசூரில்உள்ள 121 தடா கைதிகளின் விடுதலை ஆகியவற்றில் கர்நாடக அரசு நடந்து கொண்டவிதம் சரியானதாக தெரியவில்லை.
ராஜ்குமாருடன் கடத்தப்பட்ட நாகப்பா, தப்பி வந்தாக நான் கருதவில்லை. அவரைவீரப்பனே விடுதலை செய்து விட்டார். இதனால் எங்களது விடுதலை வலுவிழந்துவிட்டதாக நான் கருதவில்லை. ராஜ்குமார் கடத்தல் மூலமாக தமிழர்களின் பிரச்சனை,இந்திய அளவில் கவனத்தை கவர்ந்துள்ளது.
இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் அமெரிக்கா சென்ற வாஜ்பாய் அங்குஆர்.எஸ்.எஸ். என்கிற முத்திரையுடன் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.
மத்திய மாநில அரசுகளால் தான் பொதுமக்கள் போராட்டத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.நியாயத்துக்காக நடைபெறும் போராட்டங்களை போலீஸார் மூலம் ஒடுக்கமுற்பட்டால் பொதுமக்கள் கிளர்ந்து எழுவதை யாராலும் தடுக்க முடியாது என்றுநிருபர்களிடம் கூறினார் வெங்கடேசன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications