போபர்ஸ் தலைவரைக் கைது செய்ய இன்டர்போலை நாடுகிறது சி.பி.ஐ.
டெல்லி:
போபர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மார்ட்டின் ஆர்ட்போவைக் கைது செய்யஇன்டர்போல் உதவியை சி.பி.ஐ. நாடியுள்ளது.
ரூ. 640 மில்லியன் போபர்ஸ் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஆர்ட்போசேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரைக் கைது செய்ய இன்டர்போல்உதவியை சி.பி.ஐ. கோரியுள்ளது.
சி.பி.ஐ.யின் வேண்டுகோளை ஏற்று அனைத்து நாட்டு போலீஸ் தலைமையகத்துக்கும்இன்டர்போல் எச்சரிக்கை அறவிப்பை அனுப்பும்.
டெல்லியிலுள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்திலிருந்து வெள்ளிக்கிழமை கடிதம்மூலமாக இந்த கோரிக்கை இன்டர்போலுக்கு வைக்கப்பட்டது. பிரான்சிலுள்ளஇன்டர்போல் தலைமைச் செயலகத்திற்கு இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆர்ட்போ குறித்து அபாய அறிவிப்பை வெளியிடத் தேவையான நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருவதாக சி.பி.ஐ செய்தித் தொடர்பாளர் ஒருவர்தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு ஆஜராக ஆர்ட்போ தொடர்ந்து மறுத்து வருவதால் கைது நடவடிக்கைஎடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications