வீரப்பனுக்கு சாதகமாக நடக்கவில்லை .. கர்நாடக முதல்வர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கர்நாடக அரசு வீரப்பனுக்காகப் பரிதாபப்படவோ அல்லது வீரப்பனைப் பிடிக்க நடவடிக்கை எடுக்காமலோ இல்லை என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணநிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி 9 வாரங்கள் ஆகிவிட்டன. அவரையும், அவருடன் சேர்த்துக் கடத்தப்பட்ட மேலும் 3 பேரையும் மீட்பதற்காகநான்காவது முறையாகக் காட்டுக்குச் சென்ற கோபால் வெறுங்கையுடன் திரும்பியுள்ளார்.

கன்னட மண்ணின் மைந்தன் என்றழைக்கப்படும் நடிகர் ராஜ்குமாருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் மீட்பதற்காகத்தான் வீரப்பன் விஷயத்தில் மிகநிதானமாக செயல்பட்டு வருகிறோம்.

ராஜ்குமாரை பத்திரமாக வீரப்பனிடமிருந்து மீட்க வேண்டும். அதனால் நாங்கள் வீரப்பன் தங்கியுள்ள சத்யமங்கலம் காட்டுப்பகுதியில் போலீஸாரையோஅல்லது சிறப்பு அதிரடிப் படையினரையோ அனுப்ப மாட்டோம். ஏனெனில் நடிகர் ராஜ்குமார் கர்நாடக மக்களுக்கு மிகவும் முக்கியம். அவர் பத்திரமாகஎந்தப் பிரச்சனையுமின்றி வீடு திரும்ப வேண்டும்.

வீரப்பன் குற்றவாளிதான். பலரைக் கொன்றிருக்கிறான். கொள்ளையடித்திருக்கிறான். ஆள்கடத்தலில் ஈடுபட்டிருக்கிறான். ஆனால் அதே நேரம்காவிரி கலாட்டாவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண உதவி, தமிழ்த் தீவிரவாதிகள் விடுதலை மற்றும் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள121 தீவிரவாதிகளை விடுவிக்குமாறு நிபந்தனை விதித்திருக்கிறான்.

தமிழக-கர்நாடக அரசுகள் இதற்கு சம்மதம் தெரிவித்தாலும், வீரப்பனால் சுட்டுக்கொல்லப்பட்ட கர்நாடக எஸ்.ஐ.ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல்கரிமின் மேல்முறையீட்டால் சுப்ரீம்கோர்ட் தடா கைதிகள் விடுவிப்பதற்கு தடை விதித்துள்ளது. இதனால் ராஜ்குமார் விடுதலையில் இழுபறி நீடிக்கிறதுஎன்றார் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+