தீவிரவாதத்தை முறியடிக்க இந்தியா-ரஷியா ஒப்பந்தம்
டெல்லி:
சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்க்க இந்தியாவுடன் இணைந்து ரஷியா போராடும் என்று ரஷிய அதிபர் விலாடிமிர் புடின் கூறியுள்ளார்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள புடினுக்கு செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி மாளிகையில் 21 குண்டுகள் முழங்க புடினுக்கு வரவேற்புஅளிக்கப்பட்டது. அவருடன் மனைவி லூத்மிலா புடினாவும் வந்திருந்தார். இருவரையும், ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், பிரதமர் வாஜ்பாய் ஆகியோர்வரவேற்றனர். பின்னர் அணி வகுப்பு மரியாதையையும் புடின் ஏற்றுக் கொண்டார்.
அதன் பிறகு மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் புடின் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினை பயங்கரவாதம். இதைஒடுக்குவதில் இரு நாடுகளும் சேர்ந்து செயல்பட வேண்டியது அவசியமானது.
இரு தரப்பு பொருளாதார, வர்த்தக, கலாசார, ராணுவ உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கு இந்தப பயணம் பயன்படும். ராணுவ மற்றும்தொழில்நுட்ப ஒத்துழைப்பை பலப்படுத்த இந்தப் பயணத்தைப் பயன்படுத்திக் கொள்வேன்.
இரு நாடுகளுக்கும் இடையே, நீண்ட கால நட்பை பராமரிக்க இந்தப் பயணம் உதவும். சோவியத் யூனியன் காலத்தில் இருந்தது போலவே இரு நாடுகளின் நட்புஇப்போதும் இருக்கிறது.
அணு சக்தித்துறையில் இரு நாடுகளும் இன்னும் நெருங்கிச் செயல்படும். இருப்பினும் சர்வதேச விதிகளின்படியே அணு சக்தி தொடர்பான அனைத்துபரிமாற்றங்களும் அமையும் என்றார் புடின்.
முன்னதாக மகாத்மா காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்பாத்திற்கு புடின் சென்று அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு பிரதமர்வாஜ்பாயை சந்தித்தார். இருவரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசினர்.
புடின்-வாஜ்பாய் சந்திப்பின்போது பயங்கரவாதம் குறித்து விரிவாகப் பேசப்பட்டதாக தெரிகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இரு நாடுகளும்பாதிக்கப்பட்டுள்ளதாக புடின், வாஜ்பாயிடம் தெரிவித்ததாகத் கூறப்பட்டது. செச்னியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு, ஆப்கானிஸ்தானின் தலிபான்அமைப்பினரே பயிற்சியும்,ஆயுதங்களும் கொடுத்து வருவதாக ரஷியா குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஊக்குவிப்பது குறித்து இந்தியாவின் பிரச்சினையை வாஜ்பாய், புடினுக்கு விளக்கியதாகத் தெரிகிறது.
புடினுடன் 90 பேர் கொண்ட உயர் மட்டக் குழு இந்தியா வந்துள்ளது. துணைப் பிரதமர் இலியா கிளபனோவ், வெளியுறவுத் துறை அமைச்சர் இகர்இவனோவ், பாதுகாப்பு அமைச்சர் மார்ஷல் இகர் செர்ஜியேவ், அணு சக்தித் துறை அமைச்சர் யெவ்ஜெனி அடமோவ், நீதித்துறை அமைச்சர் யூரிசைக்கியா ஆகியோரும் இதில் அடங்குவர்.
இந்தியாவுடன் நெருங்கிய உறவை வைத்துக் கொள்ள ரஷியா விரும்புவதையே இது காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் புடின் பேசுகிறார். அதன் பிறகு அவருக்கு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் புடினுக்குகெளவர டாக்டர் பட்டம் வழங்குகிறது. அதன் பின்னர் மும்பைக்குப் புறப்பட்டுச் செல்கிறார் புடின். அதற்கு முன்பாக ஆக்ரா சென்று தாஜ் மஹாலைபார்வையிடுகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications