வாஜ்பாய்க்கு டெல்லியில் மருத்துவப் பரிசோதனை
டெல்லி:
மூட்டு வலிக்காக மும்பையில் அறுவை சிகிச்சை செய்யவுள்ள பிரதமர் வாஜ்பாய்க்குதிங்கள்கிழமை மருத்துவப் பரிசோதனை நடந்தது. டெல்லி அகில இந்திய மருத்துவக்கழகத்தில் இந்த சோதனையை வாஜ்பாய் மேற்கொண்டார்.
வரும் 10ம் தேதி மும்பை பீச் கேண்டி மருத்துவமனையில் அமெரிக்காவில் வசிக்கும்இந்திய மருத்துவரான சித்ரஞ்சித் ரணவத் பிரதமருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைசெய்ய உள்ளார்.
சமீபத்தில் வாஜ்பாய் அமெரிக்கா சென்றபோது, டாக்டர் ரணவத்திடம் மருத்துவசோதனை செய்து கொண்டார்.
திங்கள்கிழமை டெல்லி மருத்துவமனையில் வாஜ்பாய்க்கு சுமார் ஒரு மணி நேரம்சிகிச்சை நடந்தது. 75 வயதான வாஜ்பாய்க்கு மூட்டில் ஜவ்வு தேயந்துவிட்டதையடுத்துகடும் வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
கடந்த மாதம் தான் இந்தப் பிரச்சனை அதிகமானது. நாக்பூரில் நடந்த பாரதீய ஜனதாகூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த வாஜ்பாயால் அதிக நேரம் நிற்க முடியவில்லை.பேச்சை பாதியிலேயே முடித்துக் கொண்டு அவர் உடனடியாக டெல்லிதிரும்பிவிட்டார்.
மூட்டு வலி காரணமாக பிரதமரின் அமெரிக்க பயணமும் 2 நாட்கள் தாமதமானது.
மும்பையில் அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் 5 நாட்கள் அவர் மருத்துவமனையில்தங்கியிருப்பார். மருத்துவனையில் இருந்தவாரே அவர் தனது அலுவலகப் பணிகளைகவனிப்பார். இதற்காக டெல்லி பிரதமர் அலுவலகத்துக்கும் பீச் கேண்டிமருத்துவமனைக்கும் இடையே ரகசிய தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவனையின் 7வது மாடி முழுவதுமே பிரதமர், அதிகாரிகளுக்காகஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவனையை சுற்றி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அருகில் கடல் இருப்பதால் கடலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியக்கடற்படையின் ரோந்து கப்பல்கள் இந்தப் பகுதியை தொடர்ந்து கண்காணிக்கும்.கடற்படையின் டைவர்களும் கடலுக்கடியில் அவ்வப்போது சோதனை நடத்திவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து பிரதமர் சில நாட்கள் கவர்னர் மாளிகையில்தங்குவார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications