வள்ளுவர் சிலையை தன்மானத்துடன் திறப்போம் .. பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர்
பெங்களூர்:
பெங்களூர் தமிழ்ச் சங்கம் நிறுவியுள்ள திருவள்ளுவர் சிலையைத் திறக்க யாரும்தேவையில்லை. சிலையை அமைத்துள்ள நாங்களே திறந்து கொள்வோம் என்று புதியதலைவராக பொறுப்பேற்றுள்ள க.சுப்ரமணியம் கூறியுள்ளார்.
பெங்களூர் தமிழ்ச் சங்கத் தேர்தலில் புதிய தலைவராக க.சு என்று அழைக்கப்படும்க.சுப்ரமணியம் வெற்றி பெற்றுள்ளார். அவரோடு புதிய அணியும் வெற்றிபெற்றுள்ளது. முன்பு க.சு. தரப்பில் இருந்த அணியே இப்போதும் பொறுப்பிற்குவந்துள்ளது.
புதிய அணியின் பதவியேற்பு விழா தமிழ்ச் சங்கத்தில் திங்கள்கிழமை மாலை நடந்தது.முன்னாள் துணைத் தலைவர் ஸ்ரீதரன் கடவுள் வாழ்த்துப் பாடினார்.கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திருக்குறள் வரதராஜன் தலைமை வகித்தார்.க.சுப்ரமணியம் வரவேற்றார்.
பதவியேற்புக்குப் பின் க.சு.பேசுகையில், திருவள்ளுவர் சிலையை நிறுவியதுநாம்தான். அதைத் தன்மானத்தோடு திறப்போம். எங்கோ இருப்பவர்கள்கோரிக்கைப்படி இந்த சிலையைத் திறக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.யாருடைய உதவியும் இதற்குத் தேவையில்லை.
தமிழ் இலக்கியம், கலைக்காக உழைத்தது இந்த சங்கம். இனியும் தமிழருக்காகவும்,தமிழ் கலைக்காகவும், கர்நாடக தமிழர் பாதுகாப்புக்கு அரணாகவும் பெங்களூர் தமிழ்ச்சங்கம் இருக்கும். பாடுபடும்.
சங்க நடவடிக்கைகளில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படும்.தமிழர்களின் நலனுக்காக சட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்றார் க.சு.
முன்னதாக இதுவரை தலைவர் பொறுப்பில் இருந்த ந.தாஸ், தலைவர் பொறுப்பைக.சுவிடம் ஒப்படைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications