பெண்களை நிர்வாணமாக்கி சிகிச்சை அளிக்கும் "மாந்திரீக டாக்டர்"
பெங்களூர்:
தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களை நிர்வாணமாக்கி பூஜை செய்த மாந்திரீகடாக்டர் பாலப்பா பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கர்நாடக-ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள ஏக்மாய் கிராமத்தில் செயல்பட்டுவரும் இந்த மாந்திரீக டாக்டர், தான் பில்லி சூனியத்தைப் போக்குவேன் என்றும் பேய்,பிசாசுகளை விரட்டுவேன் என்றும் கூறி அப் பகுதி மக்களை நம்பவைத்தார்.
பேய், பிசாசு பிடித்துவிட்டது என்று அழைத்து வரும் பெண்களை நிர்வாணமாக்கிபின்னர் அவர்கள் மீது குங்குமம் மற்றும் மஞ்சள் பொடிகளைத் தூவி பூஜைநடத்துவார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு பேய், பிசாசுகளை விரட்டிவிட்டேன் என்று கூறி நிறையபணம் பெற்றுவந்தார். கடவுளின் ஆசை மற்றும் உத்தரவுப்படித்தான் நிர்வாணமாக்கிபூஜை செய்வதாகக் கூறி மக்களை அவர் நம்ப வைத்தார்.
பூஜை நடக்கும்போது அவரும், சிகிச்சை வந்த பெண்ணும் மட்டுமே தனியாகஇருப்பார்கள். அப்போது அங்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அதேநேரத்தில் பூஜை முடிந்து வந்த பெண்கள், அந்த மாந்திரீக டாக்டரால்களங்கப்படுத்தப்பட்டனரா என்றும் தெரியவில்லை.
நன்கு படித்த டாக்டர்களால் குணப்படுத்த முடியாத நோய்களையும் தான்மாந்திரீகத்தால் குணப்படுத்துவேன் என்று கூறி ஏதும் அறியாத அப்பாவி மக்களைஅவர் நம்பவைத்திருந்தார். மேலும், அவரிடம் பூஜைக்குச் சென்று வந்தவர்களும்அவரது செயல் பற்றி இதுவரை வாய் திறக்காமலே உள்ளனர்.
போலீசிடமும் எந்தப் புகாரும் இல்லை. ஆனால் போலீஸே, அந்த மாந்திரீக டாக்டர்பாலப்பாவின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு ஒரு வழக்கைப் பதிவு செய்துவிசாரித்து வருகிறது என்று கர்நாடக மாநில கூடுதல் டிஜிபி எம்.டி. சிங் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டப் போலீஸாரும் பாலப்பா மீது ஒரு வழக்கைப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications