கேரளாவிற்குக் கடத்தப்பட்ட 18 மாடுகள் மீட்பு
கோவை:
கோவையிலிருந்து கேரளாவிற்கு நடக்கும் கடத்தலைத் தடுக்க கோவை மாவட்ட கலெக்டர் சந்தானம் நள்ளிரவில் திடீர் சோதனை மேற்கொண்டார்.இதில், மாடுகளைக் கடத்திச் சென்ற லாரிகளை மிருகவதைச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
கோவையிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி, சந்தனக் கட்டைகள், மாடுகள் உட்பட பல்வேறு கடத்தல்கள் நடப்பது குறித்து கோவை மாவட்டகலெக்டருக்குப் புகார் வந்தது.
சட்ட விரோதமாக நடக்கும் இந்தக் கடத்தல் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டரே நேரடியாக நடவடிக்கையில் இறங்கினார். நள்ளிரவுசோதனையில் ஈடுபட முடிவு செய்தார்.
கடத்தல் நடக்கும் வழிகளைக் கண்காணிக்கும் பொருட்டு, பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் என்ற இடத்தில் அதிகாலை 3 மணிக்குசோதனை மேற்கொண்டார். அப்போது பழனியிலிருந்து மாடுகளை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு லாரியை பிடித்து விசாரணை செய்தார். அந்த லாரியில் 18மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த லாரியைத் தொடர்ந்து மேலும் 3 லாரிகள் வந்தன. இவற்றையும் கலெக்டர் சோதனையிட்டு பறிமுதல் செய்தார். லாரிகளை ஓட்டி வந்தபொள்ளாச்சியைச் சேர்ந்த திருமலைசாமி (48), திருச்சியைச் சேர்ந்த செந்தில்குமார் (23), பழனியைச் சேர்ந்த குணசேகரன் (28), ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தமுருகானந்தம் (28), பரமசிவம் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ரூ. 1.5 லட்சம் அரிசி பறிமுதல்:
இதே போன்று ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி மூட்டைகளையும் போலீசார் கைப்பற்றினர். பொள்ளாச்சி அருகே ஆனைமலை அருகேபோலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
135 மூடை ரேஷன் அரிசியுடன் கேரளாவிற்குள் நுழைய முயன்ற லாரியைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர். லாரி மற்றும் அரிசியைக் கைப்பற்றினர்.
இது தொடர்பாக பழனியைச் சேர்ந்த தில்லையப்பா (26), மாரியப்பன் (27), லாரி உரிமையாளர்கள் செந்தில்மணி (28), திருவேங்கடம் (24),பொள்ளாச்சியைச் சேர்ந்த கார் டிரைவர் ரங்கராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications