பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா முடிவு
பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.இதற்கான நடைமுறைப் பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்க உயர் மட்டக் குழுபங்களாதேஷ் வருகிறது.
பங்களாதேஷில் அமெரிக்காவுக்குச் சொந்தமான நிறைய எண்ணெய் மற்றும் எரிவாயுநிறுவனங்கள் உள்ளன. இவை பூமிக்கு அடியிலிருந்து எண்ணெய் மற்றும்எரிவாயுவை வெளிக் கொணர்ந்து பங்களாதேஷுக்கு விற்கின்றன.
சமீப காலமாக அமெரிக்க நிறுவனங்கள் சப்ளை செய்த எண்ணெய் மற்றும்எரிவாயுவுக்கான தொகையை பங்களாதேஷ் தரவில்லை என்று கூறப்படுகிறது.இதனால், பங்களாதேஷ் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தினர் மீது அமெரிக்கநிறுவன அதிகாரிகள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர்.
கட்டண நிலுவையைத் தரவில்லை என்றால் இந்தியாவுக்கு எரிவாயு ஏற்றுமதிசெய்வதற்குத் தடை செய்வோம் என்றும், பங்களாதேஷில் செய்துள்ள முதலீட்டையும்திரும்பப் பெற்றுக் கொள்வோம் என்று அமெரிக்க நிறுவன அதிகாரிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இதனால், பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் திட்டம்பாதிக்கப்படும் என்று அமெரிக்கா கருதுகிறது. இதையடுத்து கோபத்தில் உள்ளஅமெரிக்க அதிகாரிகளைச் சமாதானப்படுத்துவதற்காக உயர் மட்டக் குழு ஒன்றுபங்களாதேஷ் வருகிறது.
அமெரிக்க எரிசக்தித் துறையில் சர்வதேச விவகாரங்கள் பிரிவு முதன்மை துணைஉதவிச் செயலர் கால்வின் ஹம்பே தலைமையில் இந்த உயர் மட்டக் குழு வருகிறது.இக் குழு பங்களாதேஷில் உள்ள அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயுநிறுவனங்களின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்கள்.
மேலும், இந்தியாவுக்கு எரிவாயுவை ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகளையும்,நடைமுறைப் பணிகளையும் மேற்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இம் மாதம் அமெரிக்காவுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளபங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா வாஜெத், இந்தியாவுக்கு எரிவாயு ஏற்றுமதிசெய்வது குறித்து அமெரிக்காவில் உள்ள அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார் என்றும்தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications