இலங்கை: தேர்தலுக்குப் பின் அரசியல் நெருக்கடி வரலாம்
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலை அமைதியான முறையிலும், சுமுகமாகவும் நடத்தி முடிக்கும் பணியில் அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இத் தேர்தலில் ஆளும் மக்கள் கூட்டணிக்கும், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கும்தான் கடுமையான போட்டி நிலவுகிறது.
அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும், எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கேவும் இத் தேர்தலை தங்களது நேரடிப் போட்டியாகவே கருதி பிரசாரம் செய்துவருகின்றனர்.
2006-ம் ஆண்டு வரை மீண்டும் ஆட்சி நடத்தவேண்டும் என்பதில் ஆளும் மக்கள் கூட்டணி விரும்புகிறது. நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 225இடங்களில் நிச்சயம் தனது கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை வெற்றி கிடைக்கும் என்று சந்திரிகா நம்புகிறார்.
மேலும், மக்களும் நிலையற்ற ஆட்சி அமையும் வகையில் வாக்களிக்கமாட்டார்கள். ஏதாவது ஒரு கட்சிக்கு நிச்சயம் அவர்கள் வெற்றியைத்தருவார்கள் என்றும் அவர் கருதுகிறார்.
ஆனால், சமீபத்திய தேர்தல் கணிப்பில் மக்கள் கூட்டணிக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்றும், எந்தகட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை வெற்றி கிடைக்காது என்றும் தெரிய வந்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள தொடர்பையே பெரிய ஆயுதமாக மக்கள் கூட்டணி கையில்எடுத்துள்ளது.
ரனில் விக்ரமசிங்கேவுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள உறவை தெளிவாக விளக்கும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அது பொய்யென்றுரனில் விக்ரமரசிங்கேவால் மறுக்கமுடியாது என்று பிரதமர் ரத்னசிரீ விக்ரமநாயகே கூறியுள்ளார்.
ஆனால், இதை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாக மறுத்துள்ளது. பிரதமர் கூறிய அந்த ரகசிய தகவல் ஜோடிக்கப்பட்டது. அதில் எந்த உண்மையும்இல்லை என்று அக் கட்சி கூறியுள்ளது.
இதற்கிடையே, தேர்தல் சுமூகமாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. போலீஸாருக்கும்,ராணுவத்தினரும் பாதுகாப்பு குறித்து புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரநிலைப் பிரகடனம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்படுவதாக அதிபர் சந்திரிகா குமாரதுங்கா புதன்கிழமைஅறிவித்தார்.
புதிதாகக் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 10 நாட்களுக்குள் கூடி அவசர நிலைப் பிரகடனம் பற்றி அடுத்த அறிவிப்பை வெளியிடும் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications