ஆட்சிக்கு யார் வரக் கூடாது? விளக்குகிறார் கிருஷ்ணசாமி
சென்னை:
தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்குவரக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பெரியார் பிறந்த இந்த மண்ணில் சாதிகள் அடிப்படையில் அரசியல் கட்சிகள்உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது வேதனைக்குரியதாகும்.
தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்கு வரக்கூடாதுஎன்பதுதான் முக்கியம். அதிகார பலத்தால் அடக்கி ஆள நினைப்பவர்கள்,ஊழல்வாதிகள், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள்ஒருபோதும் ஆட்சிக்கு வரவே கூடாது.
அத்தகைய நடவடிக்கையில் புதிய தமிழகம் தொடர்ந்து ஈடுபடும். தமிழகத்தில்மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக புதிய தமிழகம்உள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல்அறிவிப்பு வெளியான பிறகு கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.
பெட்ரோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை மத்தியஅரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் அல்லல்படுகின்றனர்.
ஆகவே, விலை உயர்வை மத்திய அரசு விரைவில் விலக்கிக் கொள்ளவேண்டும்.இல்லையென்றால் புதிய தமிழகம் போராட்டத்தில் ஈடுபடும்.
தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. ரேஷன்பொருட்கள் வழங்குவதிலும் முறைகேடுகள் நடக்கின்றன. இவைதடுக்கப்படவேண்டும்.
தேர்தலுக்கு முன் அனைத்து வாக்காளர்களுக்கும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்அடையாள அட்டை வழங்கப்படவேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications