மதுரையில் அதிமுகவின் 29-ம் ஆண்டு விழா
சென்னை:
அதிமுக வின் 29 ம் ஆண்டு விழாவையொட்டி மதுரையிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக தொடங்கி வரும் 17 ம் தேதி 29 வது ஆண்டு தொடங்குகிறது. கட்சி சார்பில் இதை மிகச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.இதையொட்டி, ஜெயலலிதா 17 ம் தேதி மதுரையிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, கட்சி கொடியை ஏற்றி விழாவைத் தொடங்கிவைக்கிறார். இவ்விழா மாலை 4.30 மணிக்கு நடக்கும்.
இதையடுத்து, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியல் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டு மறைந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு ஜெயலலிதாகுடும்ப நல நிதியுதவி வழங்குகிறார்.
பின்னர் கட்சியின் ஆண்டுவிழாவையொட்டி கட்சித் தொண்டர்களுக்கும், கட்சி பொறுப்பாளர்களுக்கும் ஜெயலலிதா இனிப்பு வழங்குவார். உடல் ஊனமுற்றோர்,ஆதரவற்ற முதியோர், விதவைத் தாய்மார்கள் உள்ளிட்ட நலிவுற்றோருக்கு உதவிகள் செய்கிறார்.
மேலும், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் சேர்கின்றனர் என்று அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications