அமெரிக்கா செல்கிறது உலகின் விலை உயர்ந்த கிரிக்கெட் "பேட்
மெல்பெர்ன்:
உலகிலேயே விலை உயர்ந்ததாகக் கருதப்படும் கிரிக்கெட் பேட், அமெரிக்காவுக்குஎடுத்துச் செல்லப்பட உள்ளது.
தற்போது ஆஸ்திரேலியாவில், மெல்பெர்ன் நகரில் உள்ள கிறிஸ்டி ஏல மையத்தில்வைக்கப்பட்டுள்ள அந்த பேட்டுக்குச் சொந்தக்காரர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின்முன்னாள் கேப்டன் கர்ஃபீல்டு சோபர்ஸ்.
அந்த பேட்டால்தான் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்து அவர் சாதனை படைத்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் கிளாமோர்கன் அணிக்காக விளையாடியபோதுநாட்டிங்காம்ஷயர் அணிக்கு எதிராக 1968-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதிநடந்த ஆட்டத்தில் இச் சாதனை சோபர்ஸ் படைத்தார்.
அத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க பேட் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இதை ரூ. 36லட்சத்துக்கு மார்ட்டின் கனான் என்பவர் ஏலம் எடுத்தார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த அவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.சோபர்ஸின் பேட் ஏலம் விடப்படுவதாக பத்திரிக்கையில் வெளியான செய்தியைப்பார்த்து கடந்த புதன்கிழமை நடந்த ஏலத்தில் தொலைபேசி மூலம் கலந்து கொண்டார்.
பல நாடுகளையும் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த ஏலத்தில் மிகஉயர்ந்த தொகைக்கு அந்த பேட்டை ஏலம் எடுத்தார் கனான். தனது மகனுக்காக அந்தபேட்டை ஏலம் எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து உலகிலேயே மிகவும் விலை உயர்ந்ததாக அந்த பேட் கருதப்படுகிறது.விரைவில் அந்த பேட் அமெரிக்காவுக்குக் கப்பலில் அனுப்புவதற்கானநடவடிக்கையை மெல்பெர்ன் ஏல மையம் மேற்கொண்டுள்ளது.
1958-ம்ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சோபர்ஸ் அவுட்டாகாமல் 365 ரன்கள்எடுத்தார். அப்போது சோபர்ஸ் பயன்படுத்திய பேட்டை வாங்க முயன்றதாகவும்,ஆனால் முடியவில்லை என்றும் கனான் தெரிவித்தார்.
சோபர்ஸின் இந்த 365 ரன்கள் சாதனையை மற்றொரு மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்பிரையன் லாரா, 36 ஆண்டுகளுக்குப் பிறகு 1994-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக375 ரன்கள் எடுத்து முறியடித்தார்.
லாராவின் அந்த பேட் ரூ. 32 லட்சத்துக்கு ஏலம் போனது. அந்த பேட் தான் இதுவரைஉலகிலேயே விலை உயர்ந்த பேட் என்று கருதப்பட்டது.
ஆனால், இப்போது சோபர்ஸின் பேட் ரூ. 36 லட்சத்துக்கு ஏலம் போனதை அடுத்துஉலகின் விலை உயர்ந்த பேட்டாக அது கருதப்படுகிறது.
ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் என்ற சோபர்ஸின் சாதனையை இந்தியாவின் ரவி சாஸ்திரிமுறியடித்தார். பம்பாய் அணிக்காக விளையாடிய அவர் 1984-ம் ஆண்டுபரோடாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை ரவிசாஸ்திரி அடித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications