காஷ்மீர் கண்ணிவெடியில் தமிழக ராணுவ வீரர் சாவு
ஸ்ரீநகர்:
எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தமிழக வீரர் உள்பட மூன்று வீரர்கள்தீவிரவாதிகளின் கண்ணி வெடித் தாக்குதலில் கொல்லப்பட்டனர்
ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குனி நுல்லாவில் திங்கள் கிழமைநண்பகலில் நடந்த தீவிரவாதிகளின் கண்ணி வெடி தாக்குதலில் எல்லை பாதுகாப்புப்படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர்.
எல்லைப் பாதுகாப்புப் படையினரை ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கு ஏற்றிச் சென்றபேருந்து சென்ற வழியில் இருந்த கண்ணி வெடி தீவிர வாதிகளால் ரிமோட்கண்டரோல் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டது. இந்த 294 கிலோமீட்டர்நெடுஞ்சாலைதான் காஷ்மீர் பகுதியை இந்தியாவின் மற்ற பகுதியோடு இணைக்கும்நெடுஞ்சாலையாகும்.
குண்டுவெடிப்பில் தோரு ராம், முருகன், சித்தரஞ்சன் குமார் என்ற மூன்று எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இதுவரை எந்ததீவிரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.
கடந்த மூன்று மாதங்களில் நடந்த மூன்றாவது மிகப் பெரிய கண்ணி வெடித் தாக்குதல்இதுவாகும்.
ஆகஸ்ட்மாதம் 13-ம் தேதி இதே நெடுஞ்சாலையில் குட் பகுதியில் நடந்த இரு கண்ணிவெடித்தாக்குதலில் 9 எல்லை பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். மேலும்பலர் காயமடைந்தனர்.
ராணுவம் வீரர்களை அழைத்துச் செல்வதற்கு, ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கு,பல்வேறு பொருட்களையும் காஷ்மீருக்கும், லடாக் பகுதிக்கு எடுத்துச் செல்லவும் இந்தநெடுஞ்சாலைதான் ஒரே வழியாகும்.
இந்த ஆண்டு மட்டும் கண்ணி வெடித் தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இதில் ஒரு அமைச்சரும், ஒரு ராணுவ பிரிகேடியரும், ஒரு கர்னலும் அடங்குவர்
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications