வாஜ்பாயை வாழ்த்திய இளந்தளிர்கள்
டெல்லி:
மூட்டு வலி சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை செய்யப்படவிருக்கும் பிரதமர் வாஜ்பாய் விரைவில் குணமடைய வேண்டும் என்று ஆதரவற்ற குழந்தைகள்திங்கள்கிழமை வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் பிரேயாஸ் என்ற தனியார் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமம் டெல்லி போலீஸ் இணைக் கமிஷனர் அமோத்காந்த் தலைமையில் செயல்படுகிறது.
பிரேயாஸ் ஆசிரமத்தைச் சேர்ந்த 6 முதல் 12 வயதுக்குட்பட்ட 14 குழந்தைகள், திங்கள்கிழமை அறுவை சிகிச்சைக்காக பிரதமர் மும்பை புறப்படுமுன்அவரது இல்லத்துக்குச் சென்று வாழ்த்தினர்.
12 வயதான ரோஹித்தா என்ற சிறுமிக்கு, பிரதமர் வாஜ்பாய் எந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்? அவருக்கு எங்கே சிகிச்சை அளிக்கப்படுகிறதுஎன்பது குறித்து எதுவும் தெரியாது. ஆனால் அவளோ, பிரதமர் வாஜ்பாய் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி வாழ்த்தினாள். அவளுடன்வாஜ்பாயை வாழ்த்த வந்திருந்த பிற ஆதரவற்ற சிறுமியர்கள் பிரதமருக்காக ஒரு பாட்டையும் பாடினார்கள்.
இதுகுறித்து பிரேயாஸ் இல்லத்தின் தலைவர் அமோத் காந்த் கூறுகையில், உடல்நலக் குறைவால் அறுவைசிகிச்சைக்குச் செல்லும்நிலையிலும், பிரதமர்எந்தவித எரிச்சலையும் காட்டாமல், சிரித்த முகத்துடன் எங்கள் இல்லக் குழந்தைகளின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு இனிப்பு வழங்கினர்என்றார்.
முன்னதாக, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ரஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆகியோரும் பிரதமரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதற்குப்பின் பிற்பகல் 1.50 மணிக்கு பிரதமர் வாஜ்பாய் மூட்டு வலி அறுவை சிகிச்சைக்காக மும்பை புறப்பட்டுச் சென்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications