ராஜ்குமார் விரைவில் திரும்புவார் .. கிருஷ்ணா

Subscribe to Oneindia Tamil

மைசூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள நடிகர் ராஜ்குமார் விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.

மைசூர் அருகேயுள்ள கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பியுள்ளது. இதையடுத்து நடந்த காவிரி பூஜையில் கலந்து கொண்ட முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது:

நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 73 நாட்கள் ஆகிவிட்டன. அவரை மீட்பதற்காக அரசுத் தூதர் கோபால் 5 வது முறையாக காட்டுக்குச் செல்லும்கோபால் இந்த முறை நடிகர் ராஜ்குமாரை மீட்டு வருவார்.

தூதர் கோபாலின் முயற்சி தோல்வியில் முடியும் என்று கூறப்படுவது தவறு. இதுபோன்ற ஆதாரமில்லாத செய்திகளை பத்திரிக்கைகள்தான் வெளியிடுகின்றன.

ராஜ்குமாரை மீட்கும் விஷயத்தில் அரசு தகுந்த நடவடிக்கைகளையே எடுத்து வருகிறது. இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் இருக்கிறது.எதிர்க்கட்சிகளும் அரசுக்கு ஆதரவு தருவதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் வெளியில் வந்து வேறு கருத்துக்களைஏன் தெரிவிக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றார் கிருஷ்ணா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+