இலங்கை: நாளை தேர்தல் - 5477 பேர் போட்டி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது.

மொத்தம் 225 இடங்களுக்கு நடைபெறும் இத் தேர்தலில் ஆளும் மக்கள் கூட்டணிக்கும், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும்இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

தேர்தல் களத்தில் 5,477 பேர் உள்ளனர். மொத்தம் 1 கோடியே 20 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். நாடு முழுவதும் 9,945 வாக்குச்சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவை அடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 35 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்படஉள்ளனர்.

தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு இலங்கையில் நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 58 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் 113 இடங்களில் வென்றால்தான் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடியும்.

நாட்டின் இரு பெரிய பதவிகளான நாடாளுமன்றம் ஒரு கட்சியிடமும், அதிபர் பதவி ஒரு கட்சியிடமும் இருந்தால் நாட்டில் நிச்சயம் அரசியல் நெருக்கடி ஏற்படும்என்று அரசியல் கருத்துக் கணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

அப்படி எதிர்க்கட்சியிடம் நாடாளுமன்றம் சென்றுவிட்டால் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் போய் விடும் என்றும்அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தின்போதே சந்திரிகா குமாரதுங்காவுக்கு எதிரான கடுமையான தாக்குதல் பிரசாரத்தை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டது.தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

அப்படி ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் தலைவராகப் பொறுப்பேற்கும் நானும், அமைச்சரவையும்தான் மிக முக்கியமான முடிவுகளை எடுப்போம்.

அப்போது அதிபர் சந்திரிகா குமாரதுங்காவால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது என்று பிரசாரத்தின்போதே ரனில் விக்ரமசிங்கே எச்சரித்திருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, இரு கட்சிகளின் கையில் நாட்டின் இரு பொறுப்புக்கள் என்ற நிலை பிரான்ஸ் போன்ற நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

இலங்கையிலும் இதுபோன்ற ஒரு நிலை 1994-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஏற்பட்டது. அப்போது நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் சந்திரிகா குமாரதுங்கா வெற்றி பெற்றார். ஆனால் அப்போது அதிபராக இருந்தவர் டி.பி. விஜேதுங்கா.

இருப்பினும், குமாரதுங்காவின் எதிர்ப்பைச் சமாளிக்கமுடியாமல் பதவியிலிருந்து விஜேதுங்கா விலகிவிட்டார். அதன்பிறகு சந்திரிகா குமாரதுங்காஅதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற ஆலோசனைப்படித்தான் அதிபர் செயல்படவேண்டும். அதிபர் பதவியை ஒழிப்பது தொடர்பாகநாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை புதிய அரசு இயற்றப்படும் வரை அமைச்சரவையின் ஆலோசனைப்படித்தான் அதிபர் செயல்படவேண்டும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்களாகத் திகழும் ராணுவம், காவல்துறை ஆகியவையும் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையின் உத்தரவுப்படித்தான்செயல்படும். மேலும், நிதித்துறை தொடர்பாக அதிபரின் செயல்பாடுகளை நிறத்திவைக்கவும் நாடாளுமன்றத்துக்கு உரிமை உண்டு என்றார் ரனில்விக்ரசிங்கே.

அரசியல் நெருக்கடி வரும்:

புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டாலும், அதிபருக்கான சில அதிகாரங்களை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. அதன்படி சந்திரிகா குமாரதுங்காசெயல்படுவார்.

அதாவது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தையும், அமைச்சரவையையும் அதிபர் கலைக்க முடியும். ஆனால், அதற்கு புதிய நாடாளுமன்றம்தேர்வு செய்யப்பட்டு ஓராண்டு முடிந்திருக்கவேண்டும்.

தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக ரனில் விக்ரசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அதை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 43-வது பிரிவின் கீழ்அதிபர் ரத்து செய்யமுடியும்.

அவரே, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு உறுப்பினர்களில் யாராவது ஒருவரை பிரதமராகவும் நியமிக்கமுடியும். அந்த வகையில்பிரதமராக ரனில் விக்ரசிங்கே பதவியேற்றால் பல தடைகளை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவால் ஏற்படுத்தமுடியும்.

கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராக இருக்கும் ரோஹன் எதிரிசிங்கேவும் இதே கருத்தையே கூறியுள்ளார். அதிபரின் அதிகாரங்களைரனில் விக்ரமசிங்கே குறைத்து மதிப்பிடுகிறார்.

நாடாளுமன்றமா, அதிபரா என்று எடுத்துக் கொண்டால், அரசியல் அமைப்புச் சட்டப்படி அதிபருக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது என்றார்எதிரிசிங்கே.

தற்போது பின்பற்றப்பட்டு வரும் 1978-ம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களில் ஒருவரான முன்னாள் அதிபர் ஜெ.ஆர்.ஜெயவர்த்தனேவும் அதிபருக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது என்று முன்பு ஒருமுறை கூறியுள்ளார்.

ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றத்தான் முடியாதே தவிர மற்ற எல்லா நடவடிக்கைகளையும் அரசியல் சட்டத்தால் மேற்கொள்ளமுடியும் என்றார் அவர்.

அதிபரால் எந்த துறையையும் தனது பொறுப்புக்கு எடுத்துக் கொள்ளமுடியும். மேலும், பிரதமர் வைத்துள்ள துறைகளையும் அவர் குறைக்கமுடியும் என்பதுகுறிப்பிடத்தக்கது என்று ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+