தாய்லாந்து பத்திரிகைகளைக் கலக்கும் சோட்டா ராஜன்
பாங்காக்:
மும்பை தாதா சோட்டா ராஜனுக்கும், இந்திய அரசியல்வாதிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தாய்லாந்து நாட்டு பத்திரிகைகளில் செய்திகள்வெளியிடப்படுகின்றன.
இதுகுறித்த செய்திகளை வெளியிடுவதில், தாய்லாந்து நாட்டுப் பத்திரிக்கைகளிடையே போட்டா போட்டி நிலவுகிறது.
மும்பையில் பெரிய தாதாவாகத் திகழ்ந்த சோட்டா ராஜன் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை விட்டுச் சென்று வெளிநாடுகளில் தங்கிவிட்டார்.
வெளிநாடுகளில் இருந்து கொண்டே மும்பையில் தனது ஆட்கள் மூலம் தனது சட்டவிரோத நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.
இந் நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தங்கியிருந்தபோது மற்றொரு மும்பை தாதாவான தாவூத் இப்ராஹிம் ஆட்களால் சோட்டா ராஜன்சுடப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மீது, போலி பாஸ்போர்ட் மூலம் சட்டவிரோதமாக தாய்லாந்தில் நுழைந்ததாக அந் நாட்டுப்போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவ் வழக்கு முடியும் வரை அவரை அனுப்ப மாட்டோம் என்று தாய்லாந்து போலீஸார் கூறிவிட்டனர். இதையடுத்து சோட்டா ராஜனை இந்தியாவுக்குஅழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில், சோட்டா ராஜனுக்கும் இந்திய அரசியல்வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
சோட்டா ராஜனுக்கும் இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர்கள் சோட்டா ராஜனுக்கு உதவவும் அவருக்குஆதரவாக சாட்சியம் அளிக்கவும் தயாராக உள்ளனர்.
இதற்காக சோட்டா ராஜனின் வழக்கறிஞர்கள் குழு, சில அரசியல்வாதிகளை தாய்லாந்து புறப்பட்டு வரும்படி கூறியுள்ளதாக சோட்டா ராஜனின்நெருங்கிய கூட்டாளி தெரிவித்ததாக தி நேஷன் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications